இனி நாய்களைப் பார்த்து பயந்து ஓட வேண்டாம் -வெறி நாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதியளித்த உச்சநீதிமன்றம்
தெருநாய்க்கடிச் சம்பவங்களால் நாடு முழுவதும் ஏராளமான சிறாரும் முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. பல்வேறு மாநிலங்களிலும் தெரு நாய் கடை தொல்லைகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர், 2025 ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் தாமகவே முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்தது
ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம்
இது தொடர்பாக விளக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது என்று கூறியிருந்தது
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் கோரிக்கை
தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டிய இடங்களின் பட்டியல்கல் விரிவுபடுத்தப்பட வேண்டும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ” விழங்கு பிறப்பு கட்டுப்பாடு மையம் ABC Centre செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது
உச்சநீதிமன்ற அதிரடி
விலங்குகள் நல வாரியம் பரிந்துரைப்படி மாநில அரசு முறையாக முக்கியமான தீர்ப்பை எடுத்துள்ளது,மக்களின் உயிரை நாய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசுகளையும், நிர்வாக அதிகாரிகளையும் நீதிமன்றம் பொறுப்பாக்கியது.
மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அதே இடத்தில் மீண்டும் விடக்கூடாது
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதியில் விலங்குகள் கருத்தடை மையங்களை அதிகரிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான அளவு ரேபிஸ் தடுப்பூசிகளை வைத்திருக்க வேண்டும்.
நாய்க் கடி, அதற்கான முதலுதவி சிகிச்சை குறித்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு அரங்குகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம்.
credits -google

மருத்துவ நிபுணரின் மதிப்பீடு அவசியம்
வெறி பிடித்த, ஆக்ரோஷமான, அப்புறம் படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களை, தகுந்த கால்நடை மருத்துவம் மருத்துவரின் மதிப்பீடு பரிசோதனை செய்த பிறகே சட்டப்படி கருணை கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
இந்த தீர்ப்பானது தெருநாய்களை துன்புறுத்துவதற்கோ அல்லது கொள்வதற்கோ அனுமதி அளிக்கவில்லை, வெறி பிடித்த தெரு நாய்களை மறுத்தவர்களின் மதிப்பீட்டை அறிந்த பிறகு கருணை கொலை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்,

