செய்திகள்தமிழகம்தேசியம்

ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதி:பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்

பாதுகாப்பு தொடர்பான கருவிகளின் பாகத்தை மட்டுமே இதுவரை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தன. ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாம் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளோம் என்று அரசு தெரிவித்துள்ளன. வானில் உள்ள இலக்கை துல்லியமாக தரையிலிருந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளன.

  • ஆகாஷ் ஏவுகணை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
  • பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளன.
  • வானில் உள்ள இலக்கை துல்லியமாக தரையிலிருந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை.

பிரத்யேக குழு

அமைச்சரவை திட்டப்படி, ஏவுகணை முதலில் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. பிரத்யேக குழு அமைக்கப்பட்டு உள்ளனர். ஏற்றுமதியை துரிதமாக மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் செயல்படுவார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச கண்காட்சி

ஆறு வருடத்திற்கு முன்பு விமான படையினராலும், ஐந்து வருடத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தினரால் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த ஏவுகணையை சர்வதேச கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் வைக்கப்பட்ட நட்பு நாடுகள் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளன.

ஆகாஷ் ஏவுகணை இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை கொண்டு முழுவதும் வடிவமைக்கப்பட்டன. தரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *