கல்விசெய்திகள்தமிழகம்

விதிமுறைகளுடன் தமிழக பள்ளிகள் திறப்பு

அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்கள் 50 சதவீத எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு வரலாமென்று கூறப்பட்டது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இடைவெளியை பின்பற்றுதல்

போதிய இடைவெளி விட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் உரையாட வேண்டும். வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் சுற்றி திரிவதை ஊக்குவிக்கக் கூடாது. வகுப்பறை இறக்கைகள் 6 அடி இடைவெளி விட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்யலாம். பள்ளிகளில் கூட்டம் போடாதவாறு 50 சதவீத மாணவர்கள் மற்றும் வகுப்பறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆசிரியர்களின் விதிமுறைகள்

முதல் குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பள்ளிக்கு வந்து பாடங்கள் நடத்தலாம். இரண்டாம் குழுவினர் புதன், வியாழன் ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம். மீண்டும் முதல் குழுவினர் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும். இதைத் தொடர்ந்து இரண்டாவது குழுவினர் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும். எஞ்சிய நாட்களில் முதல் குழுவினர் வரலாம். இவ்வாறு மாறி மாறி அட்டவணை தயாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்களின் விதிமுறை

ஒரு நாளில் ஒரு குழுவினர் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். முதல் குழுவினர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரவேண்டும். இரண்டாவது குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தூய்மை மற்றும் முன்னெச்சரிக்கை விதிமுறைகள்

கைகளை சுத்தப்படுத்த சோப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்திருக்க வேண்டும். சானிடைசர் வைத்திருப்பது அவசியம். பள்ளிகளுக்கு நுழையும் போது முன்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதை நாற்காலிகள், கதவுகள், ஜன்னல்கள் அப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டிற்க்கு பதிலாக தொடர்பற்ற முறையில் வருகையை பதிவு செய்யும் முறையை கையாள வேண்டும்.

தொற்றை தடுக்கும் விதிமுறைகள்

பள்ளியின் உபகரணங்களை தொடுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை அவ்வபோது அனைவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பகுதியையோ, முகத்தையோ தொடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் இவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருப்பதை பள்ளி தலைமை ஆசிரியை உறுதி செய்தல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *