ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்விழிப்புணர்வு

அமாவாசை நாளான இன்று முன்னோர் குலதெய்வ வழிபாடு

அமாவாசை வழிபாடு செய்ய வேண்டியது நமது கடமை ஆகும். வீட்டில் எளிய முறையில் விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்யலாம். அல்லது குல தெய்வ வழிபாடு செய்வோர்கள் பலர் உண்டு. அமாவாசை முடிந்து வளர்பிறை வரும் ஆகையால் பலர் அவர்கள் நல தொடக்கத்தை தொடங்க உதவுவது வளர் பிறை நாட்கள் ஆகும். நேற்று மாலை 5.30 மணிக்கு மேல் தொடங்கிய அமாவாசை நாள் இன்று

அமாவாசை

அமாவாசை நாளில் உடல் மற்றும் மன மாற்றம் ஏற்படும் உடலில் உள்ள உறுப்புகள் இயக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். கிரகங்களும் இந்தாளில் மாற்றம் பெறுகின்றன. வீட்டில் வாழ்ந்த நம் முன்னோர்களை நாம் நினைத்து அவர்களுக்கு அமாவாசை நாளில் எள் மற்றும் தண்ணீர் இட்டு வழிபாடு செய்வது குடும்பத்தை செழிப்புடன் இருக்கச் செய்யும்.

அமாவாசை நாளில் கோ பூஜை அகத்திகீரை

அமாவாசை நாளில் செய்யும் கோ பூஜைக்கு சிறப்புண்டு. அந்நாளில் பசுவுக்கு உணவு கொடுத்து அகத்திகீரையை கொடுத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு தரும். வாழை, கனி ஆகியவற்றை பசுவுக்கு கொடுத்து வழிபாடு செய்வோர்கள் உண்டு.

அமாவாசை சம்பிரதாயம் பூஜைகள்

அமாவாசை நாளில் காலையில் பிரதமிருந்து குளித்து ஆடை உடுத்து வீடு வாசகனைத்தும் சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

கோ பூஜை செய்பவர்கள் அகத்திக்கீரை அருகம்புல் பழங்கள் பசுவிற்கு தரலாம். வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் என அவரவர் வசதிகளுக்கு வாய்ப்புகளுக்கும் ஏற்ப வழிபாடு செய்த வருகின்றனர். சித்திரை மாதத்தில் சிறப்பான அமாவாசை வழிபாட்டில் பாவங்கள் நீங்கி சுபக்ஷம் பெறலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அமாவாசை நாளில் கோவில் வீடு இரண்டிலும் வழிபாடு விளக்கேற்றுவது சிறப்பு என்றாலும் சிலர் முன்னோர்கள் வழிபாட்டில் அகத்திக்கீரை கொடுப்பது அருகம்புல் மற்றும் உணவு சமைத்து அதை படையல் ஆக்கி முன்னோர்களுக்கு தருவது. இந்நாளில் மாமிச உணவுகளை தவிர்ப்பது போன்ற முக்கியமான நடவடிக்கைகள் ஈடுபடுகின்றனர். அம்மாவாசைக்கு பின்வரும் வளர்பிறை நாட்களில் புது தொடக்கத்தை தொடங்க அம்மாவாசை பூஜை செய்கின்றனர்.

குலதெய்வ வழிபாட்டுடன் முன்னோர்கள் ஆசி பெறுதல்

குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து சித்திரை மாத சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்பவர்களும் உண்டு. இந்நாளில் ஒருவேளை மட்டும் ஆண்கள் சாப்பிட்டு மற்ற இருவேளை விரதம் இருப்பார்கள். பெண்கள் நிச்சயமாக உணவு சமைத்து சாப்பிட வேண்டும் விரதம் இருக்க அனுமதிகள் ஒரு சில குடும்பங்களில் விரதம் இருக்க மறுக்கப்படுகின்றது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. அமைதியில் அற்ற நிலை இருக்கின்றது. என்ற தோன்றினால் பறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும் முடிந்த அளவுக்கு என்னுடன் தண்ணீர் வைத்து தருதல் சிறப்பு தரும்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *