ரேகா சத்யாவின் காதலை ஆதரிக்கும் விஜயா – நான் சொன்னது பலிச்சிருச்சு – மனோஜ் வேண்டாம் -ரோகிணிக்கு அட்வைஸ் கொடுக்கும் வித்யா
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரேகா சத்யாவின் காதலை அண்ணாமலைக்கும் விஜயாவிற்கும் தெரியப்படுத்துகிறாள் மீனா, இதை சொன்னதும் நான் சொன்னது பலிச்சிருச்சு!! எனக்கு ரொம்ப சந்தோஷம்!!உன்னோட தம்பிக்கும் சிந்தாமணி உடைய பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணு வைச்சுருங்க அப்படின்னு ரொம்பவே ஆர்வமா சொல்லிக்கிட்டு இருக்காங்க விஜயா
சத்யாவின் காதலை கிண்டல் அடிக்கும் விஜயா
புத்தகம் மீனாவும் வீட்டிற்கு வந்த உடனே சத்யா மற்றும் ரேகாவின் காதலை சொல்கிறாள் அது மட்டும் இல்லாமல் ரேகா செந்தாமணி உடைய பொண்ணு என்பதையும் தெரிவிக்கிறார், ரேகாவும் சத்யாவும் இரண்டு பேருமே மனதார காதலிக்கிறார்கள் அவர்களுக்கு எப்படி சிந்தாமணியை மீறி கல்யாணம் செய்து வைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று முத்து அண்ணாமலையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான், இதைக் கேட்ட உடனே விஜய் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை
credits – google

சிந்தாமணி நல்லாவே இருக்க கூடாது
ரொம்ப சந்தோஷத்துல இருக்காங்க, அன்னைக்கே சிந்தாமணியை பார்த்து நான் வயிறு எரிஞ்சு சொன்னேன் இவ்வளவு ஏமாத்தி பணம் சேர்த்து வைக்கிறது உங்க பொண்ணுக்கு தானே அவளை கண்டிப்பா ஒன்னும் இல்லாத பயம் கூட ஓடிப் போக போற, நா விடுற சாபம் கண்டிப்பா பலிக்கும்னு சொல்லிட்டு வந்தேன் அதே மாதிரி சிந்தாமணி ஓட பொண்ணு ஒன்னும் இல்லாத சாதாரண பூங்காற்றுவளோட குடும்பத்தை சேர்ந்த பையனை காதலிக்கிறா அப்படிங்கிறது கேட்டு உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எப்படியோ சின்னமணி நல்லாவே இருக்க கூடாது அது தான் எனக்கு வேணும், சத்யாவும் ரேகாவையும் கல்யாணம் பண்ணி வைச்சுருங்கனு சிரிச்சுக்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காங்க
வித்யாவிடம் அழுது புலம்பும் ரோகினி
நீண்ட நாள் கழித்து வித்யா ரோகினி சந்தித்து பேச ரோகினியின் வீட்டிற்கு செல்கிறாள், ரோகினி கடந்த இரண்டு நாட்களாகவே விஜயாவினால் ஏற்பட்ட அவமானத்தினாலும் மன கஷ்டத்தினாலும் இரண்டு நாட்களாக ரோகிணியின் மனசை சரியில்லை, உன்னை பார்த்த உடனே அழுது புலம்ப ஆரம்பிக்கிறாள், எல்லாருமே என்னை விட்டு விலகிட்டாங்க, நீயும் மத்தவங்க மாதிரி என்னை விட்டு விலகிப் போயிட்ட! நான் சொல்லி அழுகருக்கும் பேசுறதுக்கும் கூட ஆள் இல்லாமல் நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று தெரியுமா? மனோஜ்க்கு கூட என் மேல ஒரு சாப்ட் கார்னர் வந்துருச்சு இருந்தாலும் அவங்க அம்மா பேச்சைக் கேட்டு என்னை விட்டு விலகி போறாங்க என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்
நீ மனோஜுக்கு டிவோர்ஸ் கொடுத்துடு – அதுதான் நல்லது இன்னைக்கு அட்வைஸ் பண்ணும் வித்யா
இப்போ அழுது புலம்பி என்ன ஆகப்போகுது ரோகிணி, நான் அப்பவே சொன்னேன் உங்க மாமியார் கிட்ட எந்த அளவுக்கு ரீல் சுத்தாத ஏன்னா அவங்க அந்த அளவுக்கு உன்மேல நம்பிக்கை வச்சிருந்தாங்க அந்த ரெண்டு மருமகளை விட உன் மேல தான் ரொம்ப பாசமா இருந்தாங்க, நீ இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை பண்ணிட்டு அவங்க ஏத்துப்பாங்கன்னு நினைச்சா அது நடக்கவே நடக்காது, உங்க மாமியாரும் அதுக்கு விடவே மாட்டாங்க, நீ கோர்ட்டுக்கு போறத விட்டுட்டு கிருஷோட எதிர்காலத்தை யோசி, மனோஜிற்கு டிவோர்ஸ் கொடுத்து விடு என்று அட்வைஸ் கொடுத்து கொண்டுருக்கிறாள்
எனக்காக ஓரு வாழ்க்கை இருக்க கூடாதா??
வித்யா சொன்னதை கேட்ட ரோகினியின் அம்மாவும் உன் பையன் எதிர்காலத்தை மட்டும் யோசி, மனோஜ் உனக்கு வேண்டாம், உன் பயனும் வளர்ந்துட்டே வருகிறான், அவனுக்கும் எல்லாமே புரியுது, அதுக்கு அப்புறம் உனக்குன்னு ஒரு வாழ்க்கை துணையாக கடவுளே அனுப்பி வைப்பாருனு லட்சுமியும் சொல்லிக்கொண்டே இருக்க,அழுதுகொண்டு இருந்த ரோஹிணி கண்ணீரை அவளே துடைத்து கொண்டு என்னால மனோஜை மறக்க முடியாது, எனக்குன்னு ஒரு வாழ்க்கை நான் வாழக்கூடாதா?? என்று கேள்வி கேட்கிறாள்,ரோகினியின் அன்பு என்னவோ உண்மைதான், மறுமணம் என்பதும் சாத்தியமே இருந்தாலும் ரோகினி மனோஜை திருமணம் செய்ய கையாண்ட முறை தப்பு

