electionTop Newsசெய்திகள்தமிழகம்வாழ்க்கை முறைவாழ்வியல்விழிப்புணர்வு

நாங்குநேரி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு?ஏன்??

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை செலுத்தமால் புறக்கணித்துள்ளனர், இந்த தேர்தல் புறக்கணிப்பு பல அரசியல் கட்சிகளுக்கு எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் ஆகும்

தொடர்ந்து நிலவும் சாதிய மோதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல்

மார்ச் 2-ஆம் தேதி இரவு பெரும்பத்து இந்திரா காலனியில் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில், ஜான் (47) என்ற மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு வட மாநில தொழிலாளி உயிரிழந்தனர்.

கிராமத்தில் தொடர்ந்து நிலவும் சாதிய மோதல்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலை கண்டித்து, வாக்குப்பதிவு மையத்திற்கு செல்லாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை மற்றும் பாதுகாப்பு கோரி மக்கள் வாக்களிப்பை தவிர்த்தனர்.

வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட செல்லாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4 மணி நேரமாகியும் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்

அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், இந்த கிராமத்தில் இது போன்ற நிகழும் அச்சுருத்தும் சூழலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க கூறி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *