NEWNewsசெய்திகள்தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி – திமுகவினருக்கு கண்களிலும் காதுகளிலும் பொறாமை புகை தான் – சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர்

சென்னையில் நடைபெற்ற தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெற்றி பெற்றுள்ளார், தாவியக்கு அரசுக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் மேலும் 103 எம்எல்ஏக்கள் தாவேக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருப்பினும் பெரும்பான்மை 118 எம்எல்ஏக்கள் தான், கூடுதல் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றதால் தவெக அரசு நம்பிக்கை வாகனத்தில் வெற்றி பெற்றுள்ளது

credits – Google

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் முன் வைத்த குற்றச்சாட்டு

புதிய அரசு, தங்களின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, கடந்த திமுக அரசு மீது தவறான நிதிநிலை குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை திசைதிருப்ப முயல்வதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் முதலமைச்சர் விஜய் ஜோசப், கடந்த திமுக அரசு ரூ. 10 லட்சம் கோடி கடனையும், காலியான கருவூலத்தையும் விட்டுச் சென்றுள்ளதாகக் கூறியிருந்தார்

நிதியமைச்சர்/பொறுப்புக்கு வந்தவுடனேயே கருவூலத்தில் பணமில்லை என்று கூறுவது தவறு, மாநில நிதி நிலை சரியாகவே உள்ளது” என்று மறுப்பு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரீயல் ஆட்சியாக நடத்துங்கள், புஷ்பா அரசு போல் இருக்க கூடாது என்று விமர்சித்து பேசியுள்ளார்

வாக்கெடுப்பிற்கு முன் எதிர்க்கட்சி வெளிநடப்பு

குறிப்பாக திமுக கூட்டணி கட்சியில் இருந்த காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் வெளி ஆதரவு கிடைத்ததால் மட்டுமே இந்த அரசு தப்பித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்

கடைசியில் “இந்த அரசுக்கு முட்டுக்கட்டாக இருக்க மாட்டோம், ஆனால் முறைகேடுகளை ஏற்க மாட்டோம் ” என்று கூறி திமுக தலைவர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ கொள்ளிடம் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்,

அதேபோல் தேமுதிக கட்சியின் பொறுப்பாளரான பிரேமலதா விஜயகாந்த் வெளிநடப்பு செய்தார்,திமுக உறுப்பினர்கள் சென்ற பிறகு வாக்கெடுப்பு நடத்தி தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது

திமுகவினர் கண்களிலும் காதிலும் பொறாமை புகை

வாக்கெடுப்பு முடிந்ததற்குப்பின் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தனது பல பலத்தை நிரூபிக்கும் பொழுது, அதை எதிர்கொள்ள துணி இல்லாமல் திமுகவினர் பின்வாசல் வழியே பயந்து ஓடுகின்றனர் என விமர்சித்துள்ளார்

ஒரு வலுவான எதிர்க்கட்சியாக ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்காமல், வெறுப்பை மட்டுமே முன்வைத்து வெளிநடப்பு செய்வது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று குற்றம் சாட்டி உள்ளார்

தோல்வியில் மூழ்கி திக்கி திணறும் திமுக வினர் சேற்றை வாரி இறைக்கிறார்கள்,நம் மீதுள்ள பொறாமை புகை திமுகவினர் கண்களிலும், காதிகளிலும் வருகிறது என்று மக்கள் பேசுகின்றனர்

நாம் அதை பற்றி கவலை பட வேண்டாம்,மக்கள் நலனும்,மக்கள் பணியும் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *