விளாத்திகுளம் பிளஸ் டூ பள்ளி மாணவி வழக்கு – நீதிமன்றம் அளித்த அதிரடியான தீர்ப்பு இரட்டை தூக்கு தண்டனை
கடந்த மார்ச் மாதம் அன்று இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது,இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி என்பது குறிப்பிட தக்கது இன்று இரண்டு மாதம் கழித்து இதற்கான தீர்ப்பை நீதிமன்றத்தில் அதிரடியாக தூக்கு தண்டனையாக அறிவித்துள்ளது
குற்றவாளி என நிரூபித்த போலீசார்
இந்த வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டு,போகோ சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைத்தனர் மேலும் மொத்தமாக 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது,
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் சிறை மற்றும் இரட்டை தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
விளாத்தி குளம் மாணவிக்கு நீதி கிடைத்ததில் நிம்மதி அடையும் பொதுமக்கள் இன்னும் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக நடந்து கொண்டிருக்கும் போதை பொருளுக்கு அடிமையாகிய இளைஞர்கள் பொதுமக்களை கஷ்ட படுத்துவதும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என வருத்தம் தெரிவிக்கின்றனர்
முந்தைய திமுக அரசின் கீழ் மக்கள் தொடர்ச்சியான அச்சத்தில் இருந்ததாக நாம் நினைத்தோம், ஆனால் தற்போதைய திமுக அரசின் கீழும் அவர்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது” என்று குற்றம் சாட்டி வருகின்றனர், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன்றனர்

