சிங்கப்பெண் அதிரடி படையை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் -குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை
ஜூன் 9 சென்னை ராஜரத்தினம் மைதானத்தில்,பெண்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்ய, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் அறிவித்த படி, இன்று ” சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை “பிரிவினை தொடங்கி வைத்துள்ளார்
மனதார சொன்னது இன்று நிறைவேறியது
சிங்கப்பின் சிறப்பாக அடிப்படையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் அந்த சிறப்பு ரோந்து வாகனத்தையும் ஒட்டி தொடங்கி வைத்து உரையாற்றினார், இதில் பேசிய முதல்வர், தேர்தல் அறிக்கையின் பொழுது,வெறும் வாக்குறுதியாக சொன்னது கிடையாது இந்த திட்டம் மனதார சொன்ன திட்டம் அதனால் தான் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்
பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், அவசர உதவி அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
போதை பொருள் தான் காரணமே
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொல்லை, இணையவழி துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும்,இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது போதை பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது அதையும் விரைவில் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தப்பு செய்பவர்களுக்கு வார்னிங் கொடுக்கிறேன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். இதுவே தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய எடுக்கும் முதற்படி என்றும் கூறினார்
சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையின் செயல்பாடுகள்
பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்று காவல் பணிகளை மேற்கொள்ளுதல்
காவல்துறையின் இருப்பை உறுதி செய்தல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு,நம்பிக்கையை வளர்த்தல்
பொது இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல்
குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் மக்கள் இயக்கமாக செயல்படுதல்
சிங்கப்பெண் அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு எஸ்.பி. 2 டி.எஸ்.பி., மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டனர். பெண் ஐ.ஜி. தலைமையில் பெண்கள் பாதுகாப்புக்கு என தனியாக உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
புதிய பணியிடங்கள்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த சிங்கப்பெண் அதிரடிப் படையில் வாய்ப்பளிக்கப்பட்டு, பெண்கள் பாதுகாப்பு முன்னெடுக்கப்படுகிறது.சிங்கப் பெண் அதிரடிப்படையில் 2,500 புதிய பணியிடங்கள் கொண்டு வரப்படும்

