மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் – 1 லட்சும் ரூபாய் ஊக்கத்தொகையும் கிடைக்கும்
நாட்டிலேயே மகளிர் முன்னேற்றத்துக்காக பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கடந்த திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.தற்போது தவெக அரசானது அளித்த தேர்தல் அறிக்கையில் மகளிர் உதவி குழுவில் 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும் என அறிவித்தது குறிப்பிட தக்கது
மகளிர் சுய உதவி குழு தொடக்கம் எப்போது
பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் (Mahalir Thittam) தமிழகத்தில் முதன்முதலில் 1991- 1992 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த மகளிர் சுய உதவி குழுவில் ஒரே பகுதியைச் சேர்ந்த 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம்
ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மற்றும் பின்தங்கிய பெண்களை முறைசாரா குழுக்களாக இணைத்து, அவர்களின் சிறு சேமிப்பு மூலம் வங்கிக் கடன்களைப் பெற்றுத் தருவது மற்றும் வறுமையை ஒழிப்பது நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது
இந்தியாவில் மொத்தம் பயனடையும் மகளிர்கள்
இந்தியா முழுவதும் சுமார் 4.76 லட்சம் குழுக்கள் உள்ள மகளிர்கள் “சுய உதவி குழு ” மூலம் பயணடைந்து வருகின்றனர்
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 53.74 லட்சம் உறுப்பினர்கள் இந்த குழுக்கள் மூலம் பயணடைந்து வருகின்றனர், கிராம புற ஏழை மகளிர் தற்சர்பாக வாழவும், சிறு சேமிப்பு பெறுகவும் இத்திட்டம் பெரிதும் உதவுகிறது
தவெக அரசு அறிவித்த வாக்குறுதி
சிறு குறு தொழில் முனைவோராக மாற விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திருப்பிச் செலுத்த தேவையற்ற வகையில் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டமானது விரைவில் அறிவிப்பு வெளியாகும்
