மனோஜை வேவு பார்க்கும் மீனா, ஸ்ருதி ஆனால் முத்துவிடம் சிக்கிய தருணம்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசையில் இன்று மனோஜை பின் தொடர்ந்து ரோகினியுடன் பேசுகிறாரா இல்லையா என்று பார்க்க சொல்லி விஜயா, மீனா ஸ்ருதியிடம் சொல்கிறார்,கடைசியில் முத்துவிடம் மனோஜ் மாட்டுகிறார்
விஜயாவின் சந்தேகம்
விஜயா மனோஜிற்கு இரண்டாவது கல்யாணம் பண்ண ஆவளோடு எதிர் பார்த்து கேட்டு கொண்டிருக்கிறாள், ஆனால் மனோஜ் அதை கண்டுக்காமல் “இப்போதைக்கு திருமணம் வேண்டாம், நான் பிசினஸ் டெவெலப் பண்ண வேண்டும் “என்று கூறுகிறான்,இந்த பதில் எல்லாரையும் யோசிக்க வைக்கிறது, விஜயாவிற்கும் மனோஜ் மீது நம்பிக்கை இல்லை, உடனே மீனாவையும், ஸ்ருதியையும் அழைத்து மனோஜ் ரோகினியுடன் திருட்டு தனமாக குடும்பம் நடத்துவனோ?? என்ற சந்தேக வருகிறது,நீங்கள் ரெண்டு பேரும் மனோஜ் எங்கெல்லாம் போகிறானோ பின்னாடியே போய் பாருங்க, ரோஹிணி கிட்டயும் பேசுறானா?? பார்த்து சொல்லுங்கன்னு சொல்கிறாள்
credits -google

மனோஜின் நடவடிக்கை -ஸ்ருதிக்கு சந்தேகம்
விஜயா சொன்ன மாதிரியே, மீனாவும், முத்துவும் அடுத்த நாள் காலையில் மனோஜை பின் தொடர்கிறார்கள்,மனோஜ் ஷோரூம் இருந்த இடத்தை விட்டு காரில் செல்கிறார், கூடவே செல்கிறார், இதை பார்த்த உடனே ஸ்ருதிக்கு சந்தேகம் வருகிறது
மனோஜ் வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் செல்கிறார், ஸ்ருதியும் மீனாவும் பின் தொடர்ந்தே செல்கிறார்கள்,”மீனாவிற்கு, அத்தை முதல் முதலில் ஒரு வேலையை என்னை நம்பி கொடுத்திருக்கிறார், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம், ஆனால் ஸ்ருதிக்கு இதெல்லாம் நமக்கு தேவையா?? “என்ற எண்ணம்.
மனோஜ் மாமியார் தேவிகா காரில் ஏதோ பிரச்னை என்பதால்,மனோஜ் அவரை சந்தித்து பேசிவிட்டு காரில் கூட்டி செல்கிறார், இதை பார்த்த ஸ்ருதிக்கு சந்தேகம் வரவைக்கிறது, ” இவர் தேவிகா தானே? ஒரு வேளை பணக்கார பெண் கிடைக்க வில்லை என்று பணக்கார ஆண்ட்டியை பிடித்து விட்டாரோ என்னவோ?? ” என்று பேசி கொண்டிருக்கிறார்.ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்றும் சந்தேக படுகின்றனர்,
அப்படியெல்லாம் இருக்காது,அவர் இப்பவரைக்கும் ரோகினியை பார்க்கவில்லை, இதை அத்தையிடம் சொல்வோம், தேவிகாவை சந்தித்ததை சொல்வோம் என ஸ்ருதி கூற, அதை சொல்ல வேண்டாம், இப்போதைக்கு ஸ்ருதியிடம் பேச வில்லை அதை மட்டும் சொல்வோம், பிறகு தேவிகாவை பற்றி சொல்லிவிடலாம் என்று மீனா சொல்லி விட்டார்
மனோஜை மிரட்டும் ரோஹிணி
ரோஹிணியிடம் போன் வந்த உடனே மனோஜ் ஐஸ்கிரீம் கடைக்கு செல்கிறார், அந்த நேரம் பார்த்து முத்துவும் அதே இடத்திற்கு கார் சவாரியுடன் வர மனோஜிற்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது,
மனோஜ் ரோகினியிடம் எப்போது வயிற்றில் இருக்கும் கருவை கலைக்க போகிறாய் என்று கேட்க, ரோஹிணி கோபத்துடன் பேசி கொண்டிருக்கிறார், “நான் உயிரோடு இருக்க காரணமே என் மகன் கிருஷ் தான், அவனோடு உனக்கு நல்ல பாண்டிங் உருவாகட்டும், அவனை இரண்டு நாள் உன்னோடு வைத்துக்கொள், அதுக்கு அப்புறம் கரு கலைப்பதை யோசிக்கலாம், இப்போதைக்கு கிரிஷ் சரியாகணும் என்று சொல்கிறார்.
credits-google

விஜயாவிற்கு தெரிய வரும் உண்மை
முத்து தூரத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார், மனோஜும் ரோகினியும் கிரிஷிற்கு அன்பாக ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருப்பதை வீடியோ எடுத்து உடனே விஜயாவிற்கு அனுப்புகிறார், இன்றைக்கு வீட்டில் மனோஜிற்கு சம்பவம் இருக்கிறது என்று காத்திருக்கிறார்
மீனாவும் ஸ்ருதியும் விஜயாவிடம் ரோகினியை மனோஜ் பார்க்க கூட இல்லை என கூற, முத்து அனுப்பிய வீடியோவை விஜயா பார்த்து கோவம் கொள்கிறார், அந்த நேரம் பார்த்து மனோஜும் வர, ரோகினியுடன் உனக்கு என்ன பேச்சு என்று கேட்கிறார்?? மனோஜும் திருத்திருவென்று முழிக்கிறார். இனி நாளை மனோஜின் நிலை எப்படி இருக்கும் பார்க்கலாம்.

