சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரங்கள்
கணபதி நம்முடைய பூஜையில் முதலிடம் பெறுகின்றார். கணபதிக்கு பூஜை மந்திரம் ஜெபம் செய்து நமது காரியத்தை தொடங்கினால் வெற்றி வரும். எதுவானாலும் செய்தால் நமக்கான பலன் கைமேல் வரும்.
விநாயகர் அருள்:
வினைகளை தீர்க்க விநாயகர் அருள் வேண்டும் அத்தகைய சக்தி வாய்ந்த விநாயகர் அருள் பெற நாம் தினசரி அவரை வணக்கி அவருக்கான சக்திவாய்ந்த மந்திங்களை உச்சாடனம் செய்ய விநாயகர் அருள் நம்மைத் தேடி வரும். கணபதியின் சக்திவாய்ந்த மந்திரங்கள் இங்கு கொடுத்துள்ளோம் அதனை படித்து வரவும்.

1. கணபதி அருள் கிடைக்க ஏகாக்ஷர கணபதி மந்திரம்
மூலமந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
தினசரி இந்த மந்திரம் உங்கள் பூஜையறையில் பக்தி நம்பியுடன் ஜெபித்து வரவும் கணபதியின் பூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். எண்ணிய காரியம் நடைபெறும். கணபதியை நினைத்து தொடங்கிய காரியம் வெற்றி பெறும். மனதை ஒருநிலைப் படுத்தி கவனமாக தினசரி 3 அல்லது 9 அல்லது 11 மற்றும் 108 முறை என உங்களுக்கு ஏற்ற முறையில் சொல்லவும்.

2. பரிபூரண சித்தி பெற மகாகணபதி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா
ஹஸ்தீந்த்ரா நநமிந்து சூடமருணச் சாயம் த்ரி நேத்ரம் ரஸாத்
ஆச்லிஷ்டம் ப்ரியயா ஸரோ ஜகரயா ஸ் வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர-கதேக்ஷú- கார்முக-லஸச்-சக்ராப்ஜ-பாசாத்பல
வ்ரீஹ்யக்ர-ஸ்வவிஷாண-ரத்நகலசாந் ஹஸ்லதர வஹந்தம் பஜே
விநாயகப் பெருமானின் சித்தி செய்து செய்யும் செயல் அனைத்தும் சிறப்புடன் நடைபெறும் என்பதனை நாம் உணர்ந்து செயல்பட்டால் நமக்கான பலன் கிடைக்கும். மகா கணபதியின் சித்தி செய்து கொள்ள பக்தி மற்றும் நம்பிக்கையுடன் மனதை ஒருநிலைப் படுத்தி கவனமாக தினசரி 3 அல்லது 9 அல்லது 11 மற்றும் 108 முறை என உங்களுக்கு ஏற்ற முறையில் பாரயணம் செய்யவும்.

3. எப்போதும் பாதுகாப்பு பெற மோகன கணபதி மந்திரம்
ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா
நமக்கு எப்பொழுது பாதுகாப்பு என்பது பெற்றோர்கள் மூலமோ இறை நம்பிக்கை மூலமோ நமது மனதெளிவு மூலம் கிடைக்கும் ஆனால் இறை பாதுகாப்பு அதுவும் மோகன கணபதி அருள் கிடைக்கப் பெற்றால் வாழ்வில் வளம் பெறலாம். பாதுகாப்பு வளையத்துக்குள் ஐஸ்வர்யங்களுடன் நிம்மதியாய் வாழலாம்.
மேலும் படிக்க : விருப்பகளுக்கு கணபதி மந்திரங்கள்

4. செல்வவளம் தரும் லட்சுமி கணபதி காயத்ரி மந்திரம்
ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா
இது சக்தி மிகுந்த கணபதி மூல மந்திரம் ஆகும். இந்த கணபதி மந்திரம் தமிழில் பக்தியுடன் ஜெபித்தால் தடைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது. தினமும் காலை அல்லது மாலை இந்த கணபதி மந்திரம் வரிகள் 9 அல்லது 108 முறை சொல்லி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

5. அஷ்ட கணபதி மூல மந்திரம்
ஓம் கிலி அங் உங்
சித்தர் அகத்தியர் அருளிய முக்கியமான கணபதி மூல மந்திரம் இதுவாகும். தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றி கூறி, அவற்றை வணங்குவதற்கான சக்தி வாய்ந்த கணபதி மந்திரம் தமிழில் விளக்கமாக வழங்கியுள்ளார். இந்த மந்திரம் எட்டு வகை கணபதிகளையும் ஒரே நேரத்தில் துதிக்கும் மந்திரமாக கருதப்படுகிறது.
அஷ்ட கணபதிகள் எனப்படுவது பின்வரும் எட்டு வடிவங்களாகும்:
- ஆதி கணபதி
- மகா கணபதி
- நடன கணபதி
- சக்தி கணபதி
- பால கணபதி
- உச்சிட்ட கணபதி
- உக்கிர கணபதி
- மூல கணபதி
இந்த எட்டு கணபதிகளுக்கும் ஒரே கணபதி மூல மந்திரம் “ஓம் கிலி அங் உங்” என்று கூறப்படுகிறது. இந்த கணபதி மந்திரம் வரிகள் பக்தியுடன் ஜெபிக்கப்படும் போது வாழ்க்கையில் உள்ள பல தடைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறையாக, இடது கையில் சிறிதளவு விபூதி எடுத்து அதில் கணபதியின் சுழி “உ” என எழுதிக் கொண்டு, அந்த திருநீற்றைப் பார்த்து இந்த கணபதி மந்திரம் தமிழில் 108 அல்லது 208 முறை ஜெபிக்கலாம். இவ்வாறு ஜெபித்து அணியும் விபூதி உடல்நலக் குறைகள் குறையவும், மனஅமைதி கிடைக்கவும் உதவும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தொடர்ந்து இந்த கணபதி மூல மந்திரம் ஜெபித்து வருவதால் தீய சக்திகள் விலகி, நன்மைகள், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என பழமையான ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.

6. கடன் தீர்க்கும் ருண ஹரண கணபதி மந்திரம்
ஓம் கணேசாய ருணம் சிந்தி வரேண்யம் ஹூம் நம்; பட்ஸ்வாஹா
கடன் சுமையால் மனஅழுத்தம் அனுபவிப்பவர்களுக்கு அருள் புரிவதாக கருதப்படும் வடிவம் ருண ஹரண கணபதி. கடன் துன்பங்களை நீக்கி நிம்மதி தரும் சக்தி உடைய கணபதி மூல மந்திரம் இதுவாகும். இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் ஜெபித்து ருண ஹரண கணபதியை வழிபட்டால் நிதி சிக்கல்கள் குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தினசரி காலை அல்லது சங்கடஹர சதுர்த்தி நாட்களில் இந்த கணபதி மந்திரம் 11, 27 அல்லது 108 முறை ஜெபித்து வழிபடலாம். இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வருவதால் கடன் சுமை குறைந்து மனநிம்மதி கிடைக்கும் என்றும், வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

7. தேவியின் அருள் பெற மகாவித்யா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
இது சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஆகும். இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் ஜெபித்தால் தேவியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் மனநிறைவும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

8. உலகம்வயப்பட ஹரித்ரா கணபதிமந்திரம்
ஓம் ஹும்கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
இது சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஆகும். இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் ஜெபித்தால் மக்கள் மனம் கவரும் திறன், செல்வாக்கு மற்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

9. வக்ரதுண்ட கணபதி மந்திரம் (அதிர்ஷ்ட லாபம்)
வக்ர துண்டாய ஹும்
இது சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஆகும். இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் ஜெபித்தால் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. தினமும் இந்த மந்திரத்தை மன ஒருமையுடன் ஜெபித்தால் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.

10. புஷ்டி கணபதி மந்திரம்
ஓம் கம் கைம் கணபதயே விக்னவிநாசினே ஸ்வாஹா
இது சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஆகும். இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் ஜெபித்தால் வாழ்க்கையில் வரும் தடைகள் நீங்கி, வளமும் நலன்களும் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் 9 அல்லது 108 முறை ஜெபிக்கலாம்.

11. மகிழ்ச்சி தரும் பால கணபதி மந்திரம்
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித் தி தாய ஸ்வாஹா
இது சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஆகும். பால கணபதியை நினைத்து இந்த கணபதி மந்திரம் ஜெபித்தால் மன மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

12. சக்தி கணபதி மந்திரம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேற இந்த சக்தி வாய்ந்த கணபதி மூல மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. இந்த கணபதி மந்திரம் பக்தியுடன் தினமும் சொல்லி வழிபட்டால் தடைகள் நீங்கி முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

