சினிமா

தாதா சாகேப் பால்கே விருது 2020!!!

இந்த விருது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கருதப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் விருதாகும்.


2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது நடிகர் அஜித்குமார், தனுஷ், மோகன்லால், நாகர்ஜுனா, நடிகை ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

தமிழில் விருது பெறுவோர்கள்


தமிழில் பன்முகத் திறமை கொண்ட நடிகருக்கான விருது நடிகர் அஜித்குமாருக்கும், சிறந்த திரைப்படமாக செழியன் இயக்கிய டூ லெட் திரைப்படமும் சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன் அவர்களுக்கும், சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ் அவர்களுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்திற்காக ஜோதிகாவுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத் ரவிச்சந்திரன் கும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : சமந்தா இணையும் அறிமுக இயக்குனரின் படம்


மாலையாள பால்கே விருது

மலையாளத்தில் பன்முகத் திறமை கொண்ட நடிகருக்கான விருது நடிகர் மோகன்லால்க்கும், சிறந்த நடிகருக்கான விருது குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 நடித்ததற்காக சூரஜ் வெஞ்சராமுடு, சிறந்த நடிகைக்கான விருது உயாரே படத்தில் நடித்த பார்வதி, சிறந்த இயக்குனருக்கான விருதை கும்பலாங்கி நைட்ஸ் படத்தை இயக்கிய மது சி நாராயணன் அவர்களுக்கும் சிறந்த திரைப்படமாக உயாரே திரைப்படமும் இசையமைப்பாளருக்கான விருது தீபக் தேவ் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.


தெலுங்கு விருது

தெலுங்கில் பன்முகத் திறமை வாய்ந்த நடிகருக்கான விருது நாகர்ஜுனா அவர்களுக்கும் சிறந்த நடிகருக்கான விருது முகவர் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தில் நடித்த நவீன் பாலிசெட்டி அவர்களுக்கும் சிறந்த நடிகைக்கான விருது ராஷ்மிகா மந்தனாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சகோ படத்தினை இயக்கிய சுஜித் அவர்களுக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது ஜெர்சி படத்திற்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது எஸ் தமன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : அறிவா ஆண்டவனை வழிபட மூக்குத்தி அம்மன் அறிவுரை


சிறந்த இசைப்பாளர் விருது

கன்னடத்தில் பன்முகத் திறமை வாய்ந்த நடிகருக்கான விருது சிவராஜ்குமார் அவர்களுக்கும், சிறந்த நடிகருக்கான விருது அவனே ஸ்ரீ நாம் நாராயணன் படத்தில் நடித்ததற்காக ராசித் செட்டி அவர்களுக்கும், சிறந்த நடிகைக்கான விருது யஜமான படத்தில் நடித்த தன்யா ஹோப் அவர்களுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது பிரீமியர் பத்மினி படத்தை இயக்கிய ரமேஷ் இந்திரா அவர்களுக்கும், சிறந்த படமாக முகாஜஜியா கனசுகலு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வி ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

written by SRIMATHI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *