சினிமாசெய்திகள்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வெளிநாடுகளிலும் ஒமைக்ரான் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியிட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இன்று படக்குழு கூறியதாகவது, கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : அழகு காட்டேரி அழகு காட்டேரி… கோரிப்பாளையம் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *