சினிமா

அறிவா ஆண்டவனை வழிபட மூக்குத்தி அம்மன் அறிவுரை

முக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு ரீலிசாகி இருக்கின்றது. தீபாவளிக்கு ஸ்டார் விஜய் பிரைமில் ஓடிடி முறையில் வெளியானது. மூக்குத்தி அம்மன் திரைப்படமானது, தமிழகத்தில் ஆன்மீக அம்மன் படங்களில் இதுவரை பேசப்படாதவைகள் அனைத்தும் பேசப்பட்டுள்ளன.

  • அறிவாய் இறைவனை வணங்கனும் பயப்பக்தியோடு நம்பி இறைவழிபாடு செய்யுங்க.
  • பயத்தோடு கடவுளை வணங்க வேண்டாம்.
  • சாமி போதும் சாமியார்கள் எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும்.

பக்தியை பகடையாக்கும் சாமியார்க்களுக்கும் நம்ம மக்களும் நல்ல சவுக்கடி:

பக்தியை மூலதனம் கொண்டு புக்தியை அடைமானம் வைத்துவிட்டு ஆண்டவன் மேல் நம்பிக்கை வைக்கின்றேன் என சாமியார்களை நம்பி வீட்டு பிரச்சனைகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்தல் சரியான முட்டாள் தனம் ஆகும்.

மேலும் படிக்க : பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் கலங்கிய அர்ச்சனா

அறிவாய் அணுகு

ஆண்டவனை அறிவாய் பார்க்க கற்றுக்கொடுக்கும் மூக்குத்தி அம்மன் படம் சிரிப்புடன் சிந்தனையை தூண்டுகிறது. காலத்திற்கு ஏற்ற மாதிரி கடவுளும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பதை இந்த படம் காட்டுகின்றது.

சாட்டையடி

ஆண்டவனை வைத்து அரசியல் பேசும் தமிழ்நாட்டு கழகங்களுக்கும் ஆண்டவனை வைத்து கார்ப்பரேட் ஊழியம் செய்யும் சாமியார்களுக்கும் சரியான சாட்டையடி ஆகும்.

பக்தி என்பது என்ன

மூக்குத்தி அம்மன் படம் பொதுமக்கள் பார்ப்பதன் மூலம் கடவுளின் முழு தார்ப்பரியம் அறிந்துகொள்ள முடியும். பக்தி என்பது என்ன எதற்காக கோவிலுக்குச் செல்கின்றோம். இதே மாதிரியான கேள்விகள் அனைத்தும் பதிலுடன் இருந்தது.

மூடத்தனமான நம்பிக்கை

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கடவுள்பற்றிய நம்பிக்கையைக் குறை கூறவில்லை அதே போன்று கடவுளைப் பற்றிய மூடநம்பிக்கையை முடிந்தவரை அடித்து நொறுக்கி இருக்கின்றார். இதைப் பார்த்தாவது சாமியார்கள் பக்கம் செல்பவர்கள் திருந்துவார்களா என்று யோசிக்க வேண்டும்.

கடவுள் யார்?

கடவுள் யாரிடம் பேசுகிறார் போன்ற காட்சிகளெல்லாம் காமெடியாக இருப்பினும் கலக்கலாக இருக்கின்றது. சிரித்துக்கொண்டே நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றார் ஆர்.ஜே பாலாஜி பக்தி வைத்தால் மட்டும் போதாது அத்துடன் புத்தியை தீட்டுகின்ற பத்தியை மட்டும் வளர்க்க வேண்டும் என்கிற தெளிவும் இருந்தது.

அம்மன் டயலாக்குகள்:

மூக்குத்தி அம்மன் படத்தின் நயன்தாரா டயலாக்குகள் எல்லாம் கொஞ்சம் அதிரடியாக தான் இருந்தது. டேய் என்கின்ற அந்தத் குரல் தொனி கம்பீரமாக இருந்தாலும், ஆர்.ஜே பாலாஜி பயம் கொஞ்சம் காமெடியாகவும் இருந்தது.

மேலும் படிக்க : நம்ம வீட்டு பிள்ளை அண்ணன் எங்க அண்ணன்…

சமூக சிக்கல் :

புற்றில் பால் வரும் காட்சி மற்றும் இயற்கை நிலங்களை கடவுளுக்காக அபகரித்துக் கார்ப்பரேட் தொழில் செய்யும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்களை அழகாகத் தெளிவாகக் குறை சொல்லியிருக்கின்றார்.

அத்துடன் ஒரு கடவுளை உயர்த்தி மறு கடவுளைத் தாழ்த்தும் எண்ணத்தையும் கடவுளே நாம் தப்பு செய்கின்றோம் என்பதை நேரடியாகச் சுட்டிக் காட்டுவதை காட்சிப்படுத்தி இருப்பார். அதே போன்று கடவுள் என்றால் என்ன ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கின்றார் அதை நாம் தான் உணர வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு கடவுள் தாழ்த்தி ஒரு கடவுள் உயர்த்துவது

நாளாக அம்மன் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேறு மாதிரியாக இருந்தது. தற்போது அம்மன் பக்தி விழிப்புணர்வு காலத்திற்கு ஏற்ப அப்டேட் ஆகி இருக்கின்றது. ஆர்.ஜே பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி தனது நடிப்பில் கலக்கலாக பொருந்தி இருக்கின்றார். அதேபோன்று ஆர்.ஜே.பாலாஜி மூன்று தங்கைகள் தாத்தா கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கின்றனர்.

ரிப்போர்டர் கதாபாத்திரத்தில் பாலாஜி

படத்தில் ரிப்போர்டராக வரும் பாலாஜி தொடர்ந்து ஆறு வருடம் தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் வெள்ளிமலை அபகரிப்பு பற்றிப் பேசி இருக்கின்றார். நாம் யோசிக்க வேண்டும் இந்த இடத்தில் யார் நம்மை முட்டாளாக்கி, யார் நம்மை ரசிக்க வைக்கிறார்கள் என்று காமெடியாக கச்சிதமாக காட்டியிருக்கின்றார்.

நீர் மாசுபாடு

தவறு செல்வதற்கு என்று எதுவும் தனியாகக் குறைகள் தெரியவில்லை. ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதைக்கு புதிது என்பதால் அங்கங்கே பட்டி வேலைகள் கொஞ்சம் கற்றுக்கொண்டால் இன்னும் தெளிவாக இருக்கும். நீர் மாசுபாடு குறித்து அம்மன் தலை கூந்தல் கருப்பாக இல்லை என்பதே விளக்குகின்றார். இது சபாஷ் சொல்ல வைத்தது. மக்களான நாம் இதையெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!!..

சினிமா

இதுவரை சினிமா என்பது குறித்து நமக்குதெரிந்திராத ஒரு பக்கம் இருந்தாலும் இனிமே சினிமா என்பது எப்படி இருக்க வேண்டும். என்பதற்கு இந்த போன்றது படங்கள் காட்சி சாட்சியாக இருக்கின்றன.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் பாட்டு முழுமனதோடு பக்தி செய்யுங்கள் கடவுளிடம் தர்க்கம் செய்யாதீர்கள் நம்பிக்கை என்பது வேறு நம்பிக்கை அளவு என்பது வேறு அதை அழகாக நம்பினால் இருக்காது. நம்பவில்லை என்றால் இருக்கும் என்று கலாய்த்து காட்சிப்படுத்தி இருப்பார்.

ஆர்.ஜே.பாலாஜி அசத்தல்

ஆர்.ஜே. பாலாஜி இப்படி எல்லாம் சந்திப்பாரா என்று ஒரு முறை ஆளை யோசித்துப் பார்த்துவிட்டேன். நல்லது இது போன்ற விழிப்புணர்வு பதிவு இந்த வில்லங்க சமுதாயத்திற்கு அவசியம் தான் எடுத்துச் சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதை காப்பாற்றுமா மக்களே நாம் சிந்தித்து செயலாற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *