“C.Joshep vijay எனும் நான்” வார்த்தையால் அதிரும் அரங்கம் – பல தடைகள் தாண்டி முதல்வராகினார் விஜய்
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மே 10 நடைபெற்றது.நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தேர்தல் 108 இடங்களை பெற்றது,இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார்.முதலமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்திட்ட திட்டங்கள் என்ன? பார்க்கலாம்
C. Joshep vijay எனும் வார்த்தை அதிரும் அரங்கம்
சுமார் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்குப் பிறகு முதல் முறையாக மாற்று அரசியலை கொண்டு வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
விஜய் அவர்கள் பேசிய பொழுது ” ஸ்ரீ ஜோசப் விஜய் என்னும் நான் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களையும் சத்தத்தால் அரங்கமே அதிர்கிறது இப்படி ஒரு உற்சாகமான முதலமைச்சர் வரவேற்பு இதுவே முதல் முறையாகும்
இன்னும் பல இடங்களில் ரசிகர்கள்,உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதும், “தளபதி தான் இந்த தமிழ்நாட்டின் முதல்வர் “என முழக்கம் விடுவதும் காணமுடிகிறது
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்
விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்
திரையுலகத்தைச் சேர்ந்த நடிகை த்ரிஷா, நடிகர் சஞ்ஜீவ், தயாரிப்பாளர் சிவா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்
முதலமைச்சர் விஜயின் முதல் கையெழுத்து
- இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு இரு மாதங்களுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா இலவசம்
- பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கம்
- போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுக்க, போதைப்பொருள் தடுப்பு படை அலகுகள் உருவாக்கம்
Credits – Google

முதலமைச்சர் விஜய் பேச்சின் முக்கிய அம்சங்கள்
தமிழக அரசு தற்பொழுது ₹10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனில் இருப்பதாகவும், நிதிநிலையை சீரமைக்க ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) வெளியிடப்படும் என்றும் கூறினார்.
ஆட்சியில் ஊழலுக்கு இடமளிக்க மாட்டேன் என்றும், ‘மக்களின் பணத்தில் ஒரு பைசா கூட தவறாகப் போகாது’ என்றும் உறுதியளித்தார்.
அதிகார மையம் என்பது ஒன்றுதான், அது நான்தான்” என்று கூறிய அவர், அதிகாரப் பகிர்வில் யாருக்கும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தான் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமக்கு சிறிது அவகாசம் (Time) வழங்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்

