அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் பல கோடி ரூபாய் திருட்டு -3 சிறப்பு குழு விசாரணை
இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு கால கலாச்சாரத்தை தொடரும் அடையாளமாக திகழும் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக மற்றும் நன்கொடையாக கொடுக்கும் தங்க நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் திருட்டு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது,
ராமர் அயோத்தி கோவிளில் நகை திருட்டு
கோவில் நன்கொடைப் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இணைந்து, பல நூறு கோடி ரூபாயைத் திருடியதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோவில் நன்கொடைப் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இணைந்து, பல நூறு கோடி ரூபாயைத் திருடியதாகத் தகவல்கள் வெளியாகின மேலும் இந்த புகாரின் பேரில் லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஸ்வாஸ் பந்த், ஐபிஎஸ் அதிகாரி கிரண் மற்றும் நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பிறகு, காணிக்கைக் கண்காணிப்புப் பிரிவில் பணிபுரிந்த லவகுஷ் மிஸ்ரா என்பவரின் வீட்டில் இருந்து ₹10 லட்சம் வரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள் மாயமானதாகவும் புகார்கள் உள்ளன.
இதை தொடர்ந்து விசாரணைக்கு கோவில் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் சிலர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியோடு இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகச் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது,
ராமர் கோயிலுக்கு காணிக்கை அளிக்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள தங்க கதாயுதம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது. ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவர் மற்றும் வங்கியால் பணியமர்த்தப்பட்ட முகமையின் சில ஊழியர்களே இந்தத் திருட்டைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

