பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 29ஆம் தேதி போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்கு அறிக்கையின் போது சிறு குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் முழு தள்ளுபடி என அறிவித்திருந்தார் ஆனால் முதலமைச்சர் ஆன பிறகு அதற்கு பல முரண்பாடுகளும், நிபந்தனைகளும் விதிகளும் விதிக்கப்பட்டு தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக மே 25-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தியது இருப்பினும் இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்
போராட்டத்தின் நோக்கம்
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், விவசாயிகளின் அனைத்து பயிர்க் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஜூன் 29 தமிழகம் முழுவதும் மாவட்டம் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
விவசாய பயிர் கடன் தள்ளுபடி மட்டும் இல்லாமல் பிற கோரிக்கைகளையும் முன்னிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது,
மேட்டூர் அணை திறப்பும் ஏமாற்றம்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இம்முறை அதற்கும் சாத்தியமில்லை என தமிழக அரசு தெரிவித்தது இதிழும் விவசாயிகள் ஏமாற்றதை அளிக்கின்றன
விவசாயிகளின் கோரிக்கை
தவெக அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி, ‘5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும் என நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன,
இது குறித்து கேட்ட கேள்விக்கு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. ஆலோசனைகளும் நடந்துவருகின்றன. விரைவில் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்

