வெளியானது +2 மதிப்பெண்கள் – நூற்றுக்கு நூறு சதம் அடித்த மாணவ மாணவியர்கள்
தமிழ்நாட்டில் பள்ளிகல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் 26 வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கான விடைத்தாள் திருத்துதல் பணி கடந்த மாதம் ஏப்ரல் 06 முதல் ஏப்ரல் 20 வரை திருத்தப்பட்டது, இருப்பினும் தமிழ்நாட்டில் நிகழும் சட்டமன்ற தேர்தல் அரசியல் சூழல் காரணமாக மே எட்டாம் தேதி தேர்வு மதிப்பெண் வெளியாகுமா?? பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பொறுப்பேற்ப்பது தாமதம் ஆகிய நிலையில் தேர்வு மதிப்பெண் வெளியாகுமா??என்ற சந்தேகம் மக்களிடையே நிலவி வந்தது, இருப்பினும் மே 8, பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மாணவர்களை விட மாணவிகளை அதிகம்
2026 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர், இன்று மே 8 தேதி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன,
பிளஸ் டூ பொது தேர்வில் 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், சுமார் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பிளஸ் டூ பொது தேர்வில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
+2 பொது தேர்வில் அதிகமாகஅறிவியல் பாடத்தில் 6945 பேர் 100/100 சதம் அடித்துள்ளனர் அடுத்து கணினி அறிவியல் பிரிவில் 2099 பேரும், அடுத்து கணக்கு பதிவியியல் பாடத்தில் 1946 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
மாவட்ட வாரியாக முதல் மூன்று இடம்
பிளஸ் டூ தேர்வு 98.87 சதவீதம் ஈரோடு மாவட்டம் முதலிடம்
மேலும் சிவகங்கை மாவட்டம் 98. 05% இரண்டாமிடம்
கன்னியாகுமரி 97.63 % மூன்றாம் இடமும் பெற்றுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் 97.54% நான்காம் இடத்தை பெற்றுள்ளது
திருச்சி மாவட்டம் 97.50% ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது
மாணவர்களை வாழ்த்தும் தலைவர்கள்
+2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ மாணவியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்,

