கேள்வி-பதில்தமிழகம்தேசியம்வாழ்வியல்விழிப்புணர்வு

தமிழக முதல்வர் விஜய் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 107 சீட்டுகளைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க மிகுந்த அளவில் முயற்சி செய்தது. தமிழக வெற்றி கழக முயற்சியில் பல்வேறு கணிப்புகளுக்கு இடையே விஜய் 118 எம் எல்ஏ லிஸ்ட் களுடன் முதல்வர் பதவியை ஏற்க ஆளுநரை நோக்கி பயணிக்கிறார்.

2026 முதல்வராகிறார் விஜய் 118 எம்எல்ஏ சீட்டுகள் மகிழ்ச்சி அலையில் ரசிகர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய அளவில் தமிழக வெற்றி கழகம் வெற்றியை பெற்றுள்ளது. முன்னாள் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு தமிழக வெற்றி கழக வெற்றியானது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கின்றது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 107 சீட்டுகளுடன் வென்ற தமிழக வெற்றி கழகம் விஜய் தலைமையமாக கொண்டு செயல்படுகின்றது.

117 சீட்டுகளுக்கு பெருமளவில் போராடி வந்த தமிழக வெற்றி கழகத்திற்கு வழிகாட்டியாக செங்கோட்டையன் அவர்கள் இருந்து சிக்கலை தீர்த்து வைத்துள்ளார்.

விஜய் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் அதற்கு வரும் தடைகளை தகர்த்தனர் அடுத்தது பதவியேற்க வைக்கப்பட்டுள்ள இடையூறுகளையும் விஜய் சரி செய்வார் என்று நம்பு இருந்த ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி.

credits – Google

2026 நேரு ஸ்டேடியத்தில் பதவி ஏற்கும் விஜய் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சட்டமன்றத் தேர்தலில் 34 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளை வென்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தது.

அதிமுக திமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணி, தவெக அதிமுக கூட்டணி என பல பேச்சுக்களுக்கு இடையே கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ், விசிக ஆதரவுடன் விஜய் 118 எம்எல்ஏ லிஸ்ட்களை திரட்டியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவி ஏற்பது உறுதியாக இருக்கின்றது. ஆளுநரை சந்தித்து 118 எம்எல்ஏக்களின் லிஸ்டுகளை சமர்ப்பித்தவுடன் விஜய் பதவி ஏற்புக்கு நேரு ஸ்டேடியத்தை நோக்கி செல்லலாம்.

இதன் காரணமாக விஜய்க்கு ஓட்டு அளித்த மற்றும் விஜய்க்கு ஆதரவான 18 வயதிற்கு கீழ் உள்ள அனைவரும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் எங்கும் ரீல், ஸ்டோரி, ட்ரோல்ஸ் என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தல் விஜயின் ஆதரவாக வாக்காளர்களான ரசிகர்கள்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெல்வதற்கு முக்கிய காரணமாக மாறி இருந்து ரசிகர்களின் வாக்குகள் பெருமளவில் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பல் முளைக்காத பிஞ்சு முதல் பழுத்த பாட்டி வரை விசிலுக்கு பட்டனை அழுத்தி உள்ளனர். காரணம் விஜய் ரசிகர்கள் பெற்றோரிடமும் பெரியவர்களிடமும் இந்த வெற்றியை பெற்று தந்துள்ளனர் இதற்கு தக்க சன்மானமாக நல்லாட்சியை கொடுக்க வேண்டியது விஜயின் பொறுப்பு அதை அவர் சரியாகவே செய்வார் என்று அனைத்து தரப்பிலும் சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *