electionசெய்திகள்தமிழகம்தேசியம்ராணுவம்வாழ்வியல்விழிப்புணர்வு

தொகுதி மறு வரையறை மசோதா தோல்வி – கொண்டாடும் திமுக

மக்களவையில் நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார், இது உட்பட மூன்று மசோதாக்களும் உறுப்பினர்களின் வாக்குகள் முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளன

முதலமைச்சர் ஸ்டாலினின் துணிச்சலான சவால்

தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது,பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, தனது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்துகொள்ள பாஜக அரசாங்கம் முற்படுகிறது என்று குற்றம் சாட்டினர், மிகவும் துணிச்சலாக பாஜக அரசிற்கு தொகுதி மறு வரையறையை தோற்கடிப்போம் என்று சவால் விட்டார்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி

மசோதாவுக்கு ஆதரவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற பாஜக கூட்டணி தவறிவிட்டதுமற்றும் மக்களவையில் போதுமான பெரும்பான்மை கிடைக்காததால், பெண்கள் இட ஒதுக்கீட்டுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.

இந்த தோல்வி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ளது என்றும், ‘தமிழ்நாடு வென்றுள்ளது’ என்றும் மசோதாவை எதிர்த்து கருப்பு கொடி போராட்டம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் மேலும் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *