முருக பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
முருகப்பெருமான் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சி அளிப்பார்.முருகன் வழிபாடு மன அமைதி, தைரியம், செல்வம் மற்றும் திருமணத் தடைகளை நீக்கி, கல்வி மற்றும் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும். செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விரதம் கடைபிடித்து முருகனை வழிபட்டால், பாவங்கள் நீங்கி, உடல் மற்றும் மன நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

முருகரின் சக்தி வாய்ந்த மந்திரம்
முருகரை வழிபடும்போது மனதார முருகர் மந்திரம் உச்சரித்து மனமுருகி வேண்டுதல் சொல்லி காலையிலும் மாலையிலும் சொல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்
- ஓம் சரவண பவ – பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்
- ஓம் முருகனே நமஹ – அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.
- வேலவா வேலவா – வெற்றி கிடைக்கும்* ஓம் குமாராய நமஹ – ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.
- ஓம் கந்தாய நமஹ – வலிமையும் உற்சாகமும் கிடைக்கும்.
- ஓம் சுப்ரமண்யாய நமஹ – தடைகள் விலகும்.
- ஓம் வேலாயுதாய நமஹ – வேகமும், வளர்ச்சியுமண ஏற்படும்.
- ஓம் சுவாமிநாதாய நமஹ – முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்.
- ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ – அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

