Jallikattu bullsஆன்மிகம்ஜோதிடம்தமிழகம்

திருமணத் தடை நீக்கும் முருக பெருமானின் பங்குனி உத்திரம்

பங்குனி மாதம் பௌர்ணமியில் உத்திரம் நட்சத்திரம் நாளின் பண்டிகை பங்குனி உத்திரம் ஆகும்.இந்த நாளில் சிறப்பு அம்சம், தெய்வங்களின் திருமணநடைபெற்றதாக புராணங்கள் தெரிவிக்கன்றன, மேலும் இந்த நாளில் விரதம் எப்படி மேற்கொள்ளலாம், அதன் பலன்கனை பற்றி பார்க்கலாம்

Source credit – Google

பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்தால், திருமணத் தடைகள் நீங்கி, சிறப்பான மணவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை

விரதம் இருக்கும் முறை

பங்குனி உத்திரம் நாளில் அதிகாலை எழுந்து நீராடி, முருகன் படத்திற்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம் நைவேத்தியம் படைத்து, கந்த சஷ்டி கவசம் அல்லது முருகன் பாடல்களைப் பாடி வழிபடலாம்.

பங்குனி உத்திரம் முருகன் வழிபாடு திருமண தடை நீக்கும் விரதம் கந்த சஷ்டி கவசம்

பங்குனி உத்திரத்தின் சிறப்பு அம்சம்

நீண்ட நாள் திருமண ஆகாதவர்கள், கிரக தோஷம், திருமண தடை உள்ளவர்கள் இந்த நாளில் “கல்யாணம் விரதம் ” இருந்து வழிப்பட்டால் நிச்சயம் திருமணம் கை கூடி வரும்.இந்த நாளில் முழு விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் உணவின்றி இருந்து, மாலை பூஜை முடித்து பிரசாதம் உண்ணலாம். சிலர் பழங்கள் அல்லது பாலுடன் பால் பாயசம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

Source credit- Google

காணிக்கை நிறைவேற்றுதல்

பங்குனி உத்திரத்தின் சிறப்பு பாதயாத்திரை சென்று முருகரை வழிபடுவது மற்றும் பால் குடம் எடுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற காணிக்கை இந்த நாளில் உற்சாகமாகவும், மிகுந்த பக்தியுடன் பக்தர்களால் நிறைவேற்ற படுகின்றன

வாசகர்கள் தயவுசெய்து இந்த பதிவையும் படிக்கவும் – “திருப்பம் தரும் பங்குனி மாத திருவோண விரதம்” 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *