Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைதமிழகம்

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் அத்தனையும் தனித்துவமான அம்சங்கள்

பங்குனி உத்திரம் இந்து மத மக்களின் முக்கிய பண்டிகையாக கருதப் படுகிறது. இந்த நாளிர்க்கு அத்தகைய சிறப்பும் நிறைந்திருக்கின்றன, மேலும் இந்த நாளில் சிவன் பார்வதி அல்லது முருக பெருமானை நினைத்து வழிபட்டால் திருமணம் தொடர்பான பிரச்சனை தீரும் என்பது ஐதீகம், பங்குனி உத்தரத்தின் சிறப்பினை காணலாம்

பங்குனி உத்திரம் திருமண சிறப்புகள் மற்றும் தெய்வ திருமணங்கள்

பங்குனி உத்திரம் நாளில் தான் முருகன் தெய்வாணை திருமணம், சிவன் பார்வதி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது,

மகாலட்சுமி இந்நாளில்பங்குனி உத்திரம் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

பங்குனி உத்திரம் விரதத்தின் பலன்கள் மற்றும் தெய்வ அருள்

அதேபோல் பிரம்மன் தேவன் தன் மனைவியான சரஸ்வதியை நாக்கிலே குடிவைக்க பாக்கியம் பெற்ற நாள்

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது, பங்குனி உத்திரம் நாள்தான் காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது

நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்க வரன் கை கூடி வரும்

புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருவது வழக்கம் இதற்கு ஏழுர் திருவிழா என்று அழைக்க படுகிறது

மேலும் திருமணம் தடை நீண்டுகொண்டே செல்பவர்களுக்கு, 7 நாள், 21 நாள், 28 நாள் காப்பு கட்டி விரதம் இருந்து பால்குடம் எடுத்தி வேண்டினால் திருமண கை கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *