செய்திகள்தமிழகம்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்

தமிழ்நாட்டில் இன்று கூட்டப்பட்ட சட்டமன்ற கூட்டத்தொடரானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி பதில் நேரம் இருக்காது என்றும் சட்டமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்வுகளை கவனிப்போம். தமிழ் தாய் வாழ்த்து உடன் வழக்கம் போல் சட்டமன்றம் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு பார்வை

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரானது மூன்று நாட்கள் நடைபெற இருக்கின்றது. இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும் மேலும் இது குறைந்த நாட்கள் நடைபெறுவதால் கேள்வி பதிலால் காலதாமதம் ஏற்படும் என்று வினா விடை நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் அமைதியாக சச்சரவின்றி 39 நிமிடங்கள் ஆளுநர் உரை வாசிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசின் செயல்பாடுகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் முன்னிலையில் நடைபெறுகின்றது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகளை ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டங்கள் ஆன கோவை மதுரை நடவடிக்கைகள் குறித்தும் இதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

போதை இல்லா தமிழ்நாடு தமிழக சட்டமன்ற உரை

இன்று நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகளில் 717 டாஸ்மார்க் கடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படை

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் சிங்க பெண் அதிரடிப்படை செயல்பாடு குறித்தும் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசின் கடன் சுமைகள் மத்தியில் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்கப்பின் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது என்பதை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் மும்மொழி கொள்கையை கைவிடும் தமிழக அரசு

இன்றைய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு மீண்டும் இரு மொழி கொள்கையை உறுதியாக பின்பற்றுவதாகவும் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் தேசிய அரசு கல்விக் கொள்கையை ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசின் கடன் சுமை


கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளால் சுமார் 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் அது தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும் ஒரு லட்சம் மேல் இந்த கடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

போதையில்லா தமிழ்நாட்டின் உருவாக்குவதில் தமிழக வெற்றிக்கழக அரசு முனைப்புடன் செயல்படுவதை ஆளுநர் உரை தெரிவித்துள்ளது.  சுமார் 717 டாஸ்மார்க்கள் மூடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் உரையில் தவெக வெற்றி மற்றும் தமிழக மக்களை நம்பிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி தமிழக வெற்றி கழகம் விஜய் தலைமையில் நடைபெறும் ஆட்சி சிறந்த ஆட்சி வரலாற்றில் சிறப்பான ஆட்சியாக மாறும் என்றும்  தமிழக வெற்றி கழகம் கொடுத்த உரையை ஆளுநர் வாசித்து முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *