ரோகினிக்கு மனோஜ் போடும் கண்டிஷன் – இந்த மனோஜை நம்பலாமா?? யோசிச்சுக்கோங்க ரோஹிணி!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து மீனா இருவரும் சத்யா மனைவி ரேகாவிடம் பாசத்தை பொழிந்து கொண்டுறுக்கிறார்கள், அடுத்து மனோஜ் ரோகினியிடம் குழந்தை பற்றி பேசிவிட்டு பணத்தையும் கொடுத்து விட்டு செல்கிறார், என்ன நடந்தது பார்க்கலாம்
அன்பினால் ஆச்சர்யப்பட வைக்கும் முத்து
ரேகா வசதியான பொண்ணு, அவளுக்கு சத்யா வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணி வாழனும்ங்கிறது ரொம்ப கஷ்டம், நம்ம வீட்டு பொண்ணு சந்தோசமா நம்ம தான் பாத்துக்கணும்னு முத்துவும் மீனாவும் புதுசா AC வாங்கிட்டு வந்து சத்யா வீட்டுல குடுக்கிறாங்க
சந்திராவிற்கு முத்துவை நெனைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு, ஒரு மருமகனா இந்த வீட்டிற்காக எவ்வளவு யோசிச்சு பண்ணிக்கிட்டு இருக்கீங்க னு சொல்லி முத்துவை பாராட்டி பேசுகிறார்
credits -google

எல்லாம் மறந்துவிடலாம்
மனோஜ் ரோஹிணி வீட்டிற்கு 5 லட்சத்துடன் செல்கிறான், ரோகினிக்கு குழந்தையை பற்றி நலம் விசாரிக்க வந்திருப்பானோ?? என்ற ஏக்கம் மனதில் இருக்கிறது, ரோஹிணி கோபத்துடன் “உன் குழந்தை என்று ஏன் வாய்திறக்கவில்லை என்று கேட்கிறாள் “
நாம் எல்லாவற்றையும் மறந்து விடலாம், தெரியாம தப்பு பண்ணிட்டேன்,நீ கேட்ட 5 லட்சம் இருக்கு எனக்கு டிவோர்ஸ் கொடுத்து விடு என்று மனோஜ் சொல்க்கிறார்
credits -google

என்னால் முடியாது
நான் முடிவை மாற்றிக்கொண்டேன், என்னால் இந்த குழந்தையையும் தனியாக வளர்க்க முடியாது, ” நம் குழந்தைக்காவது ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்
குழந்தையிடம் உன் அப்பா யாரென்று எல்லாரும் கேட்பார்கள், என்னை தான் கேவலமா பேசுவார்கள் என புலம்பிக்கொண்டு இருக்கிறார்
மனோஜ் போடும் கண்டீஷன்
இப்போது இந்த குழந்தை என்னோடது என்று யாரிடமும் சொல்ல முடியாது, எனக்கு டைம் வேண்டும்q, நீ அதுவரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும், ” என் வீட்டில் இருந்து DNA டெஸ்ட் எடுக்க கூப்பிட்டாலும் நீ போக கூடாது என்று கன்டிஷன் போட்டு கொண்டிருக்கிறார், குழந்தையின் செலவிற்காக இந்த பணத்தை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு 5 லட்சத்தை கொடுத்துவிட்டு வெளியே வருகிறார்,மனோஜின் பேச்சை கேட்காமல் இருப்பது ரோகினிக்கு நல்லது,
ரோகினியின் அம்மா மனோஜிடம் அழுதப்படி வேண்டி கேட்டு கொண்டிருக்கிறார், “ரோஹிணி உங்களை நம்பி தான் இருக்கிறாள், அவளை கை விட்டிடாதீர்கள் என்று அதற்கு மனோஜ் எதுவும் பேசாமல் சென்று விட்டார்

