16 செல்வங்களையும் அள்ளி தரும் திருவோண விரதம்
.திருவோண விரதம் என்பது மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாளில் பெருமாளை வேண்டி அனுசரிக்கப்படும் சிறப்பு விரதமாகும். இது செல்வச் செழிப்பு, வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் 16 வகையான பாக்கியங்களைத் தரும். இந்த நாளில் எவ்வாறு விரதம் மேற்கொள்வது மற்றும் அதன் விரத பலன்களை காணலாம்

திருவோண விரத சிறப்புகள்
- திருவோண விரதம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும்.
- மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும.
திருவோண விரதம் பலன்
வாழ்வின் வறுமை நீங்கி செல்வ வளம், குடும்ப மகிழ்ச்சி, நோயற்ற வாழ்வு, மற்றும் திருமண/குழந்தை பாக்கியம் நிலைபெறும்.
வாழ்வில் முன்னேற்றம் மற்றும் மன மகிழ்ச்சி நிலைக்கும்.
சந்திர தோஷம் நிவர்த்தியாகும்
திருவோண நாள்
ஏப்ரல் 12, பங்குனி 29 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவோண நட்சத்திரம் தொடங்குகிறது இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளின் அருளை பெற்றால் 16 செல்வங்களும் வந்து சேரும்

