செய்திகள்தமிழகம்தேசியம்விழிப்புணர்வு

பாட்டி உங்களுக்கு தெரியுமா?? வந்தாச்சு 100 நாள் வேலை திட்டம் புதிய அப்டேட்டுடன் மூதாட்டியுடன் உரையாடிய புஸ்ஸி ஆனந்த்

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை ஏற்ற பின்பு பெரும்பாலும் அந்த துறை சார்ந்த ஆய்வுகளை எம் எல் ஏக்களும், அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது 125 நாள் ஊரக வளர்ச்சி திட்டம் தொடர்பாக மூதாட்டியுடன் தவெக கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நகைச்சுவையாக கலந்துரையாடல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

credits -google

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (MGNREGA) விடைபெறுகிறது. இந்த திட்டமானது வருடத்தின் 100 நாட்கள் கூலி நாட்களாக செயல் பட்டு வந்தது

அதற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற பெயரில் புதிய திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது

125 நாட்கள் வேலை திட்டம் உறுதி

100 நாள் வேலை திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி தற்போதைய பொருளாதாரச் சூழல், பணவீக்கம் மற்றும் கிராமப்புறத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேலை நாட்களின் எண்ணிக்கை 125 நாட்களாகச் சட்டப்பூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாட்டிற்காக மத்திய அரசு இடைக்கால நிதியாக ரூ. 95,692 கோடி தொகையை வழங்கியுள்ளது என்பது இந்த திட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதில் கவனம் அதிகம் செலுத்தப்படுவது போல் உள்ளது

மேலும் புதிய தகவல்

இந்த திட்டத்தின் கீழ் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலையும், சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வேலை வழங்காவிடும் பட்சத்தில் வேலையிழப்பு உதவித் தொகை வழங்கப்படும்

விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ திட்டமானது ஜூலை 1 2026 முதல் அமலுக்கு வருகிறது

வேலைக்கு வருபவர்களின் வருகை ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்படும் இது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *