electionNewsசெய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவிழிப்புணர்வு

ஒரு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி கண்ட தவெக MLA சீனிவாச சேதுபதிக்கு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஏன்?? எதற்காக ??பார்ப்போம்

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், திமுக வேட்பாளரான பெரியகருப்பன் எதிர்த்து போட்டியிட்டார், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி -83, 375 வாக்குகள்

திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் -83,374 வாக்குகள்

குற்றச்சாட்டு வைக்கும் திமுகவினர்

திருப்பத்தூர் என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் உள்ளன, சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற ஒரு தொகுதி உள்ளது இதைத்தொடர்ந்து, பெரிய கருப்பன் முன்வைக்கும் குற்றசாட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு வரவேண்டிய ஒரு ஓட்டு மாறுதலாக இந்த தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும் , வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது, நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது இதில், தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆகவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தேர்தல் ஆணையத்தின் பதில்

அதன்​படி இந்த வழக்​கில் தமிழக தலைமை தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று தாக்​கல் செய்​த பதில்​மனு​வில்,சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்டுள்ளதாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டுக்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை எனவும்,

ஒரே பெயர் கொண்ட தொகு​தி​களுக்​கான வாக்​கு​களை கையாளும்​போது தேர்​தல் அதி​காரி​கள் மிகுந்த எச்சரிக்கை உணர்​வுடன் செயல்பட ஏற்​கெனவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது,தபால் வாக்கு வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கற்​பனை​யாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ரமற்​றது எனவும் வாதடப்பட்டது

சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்

இருதரப்பு மாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தள்ளி வைத்தனர்,நம்பிக்க வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *