ஒரு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி கண்ட தவெக MLA சீனிவாச சேதுபதிக்கு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ஏன்?? எதற்காக ??பார்ப்போம்
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், திமுக வேட்பாளரான பெரியகருப்பன் எதிர்த்து போட்டியிட்டார், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி -83, 375 வாக்குகள்
திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் -83,374 வாக்குகள்
குற்றச்சாட்டு வைக்கும் திமுகவினர்
திருப்பத்தூர் என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் உள்ளன, சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற ஒரு தொகுதி உள்ளது இதைத்தொடர்ந்து, பெரிய கருப்பன் முன்வைக்கும் குற்றசாட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு வரவேண்டிய ஒரு ஓட்டு மாறுதலாக இந்த தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும் , வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது, நடந்து முடிந்த தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது இதில், தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆகவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தேர்தல் ஆணையத்தின் பதில்
அதன்படி இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தாக்கல் செய்த பதில்மனுவில்,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும்,
ஒரே பெயர் கொண்ட தொகுதிகளுக்கான வாக்குகளை கையாளும்போது தேர்தல் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது,தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கற்பனையாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும் வாதடப்பட்டது
சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்
இருதரப்பு மாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தள்ளி வைத்தனர்,நம்பிக்க வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

