Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்

வைகாசி தொடக்கத்திலேயே மாத சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாள் சிவராத்திரி நாளாக கொண்டாடப்படுகிறது, ஆனால் வைகாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரிக்கு சிறப்பு உண்டு , இந்த நாளிர்க்கு சிறப்பான வரலாறு உண்டு, இந்த சிவராத்திரி நாளில் தான் சூரியன் சிவபெருமானை தரிசத்த நாளாகும், மாதந்தோறும் வரும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி விரதமும் வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.

credits -google

சிவ வழிபாட்டின் சிறப்பு

தீய கர்மாக்களில் இருந்து விடுபட சிவனை வழிபடுவதே ஒரே வழி. சிவ பெருமானை ஒரு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபட்டால் அவரின் அருளை எளிதில் பெற முடியும்,சிவ வழிபாட்டில் ஈடுபடும் போது சிவனின் அருள் மட்டுமின்றி நமக்குள் சிவத்தை உணரும் தன்மை, ஆன்ம பலம் போன்ற பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும். ஆதியும் அந்தமும் இல்லாதவர், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என சிவ பெருமானை வேதங்கள் போற்றுகின்றன.

வைகாசி மாத சிவராத்திரி

2026 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் முதல் நாளே சிவராத்திரி நாளாகும்

நாள் : மே 15 வெள்ளிக்கிழமை

தமிழ் தேதி: வைகாசி 01, 2026

திதி :08:31 AM வரை திரயோதசி பின்னர் 05:11 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாசை

வழிபாட்டு முறை

சிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து நீராடி, நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும், இயலாதவர்கள் பால் பழம் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம், பொதுவாக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த வருவது புண்ணியத்தை தேடி தரும்

சிவபெருமானுக்கு வில்வாலையால் அர்ச்சனை செய்து, பால் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பான பலன் கொடுக்கும்

அருகில் உள்ள சிவ தலங்களில் மாலை நேரத்தில் சென்று நான்கு கால பூஜை தரிசனம் செய்யலாம், குறிப்பாக வைகாசி மாசம் சிவராத்திரியில் சிவன் அருளை பெறுவது சக்திபார்வதி தேவியின் அருளை பெறுவதற்கு சமமாகும்

சிவராத்திரி பலன்கள்

நீண்ட நாட்களாக இருந்து வந்த காரிய தடைகள், தொழில் தடைகள்,பணத்தடை நீங்கி வாழ்வில் சந்தோசம் பெருகும்

சிவராத்திரி நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும்

தீராத நோய்கள் தீர்ந்து, உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம்

சிவபெருமான் தியானத்தின் உருவமாக செயல்பட அவரை நினைத்து தியானம் மேற்கொள்ளும் போது மனதில் உற்சாகம் பிறக்கும் மனம் தூய்மை உண்டாகும்,

ஓம் நமசிவாய என்ற நாமத்தை உச்சரிக்கும் போது மன அழுத்தங்கள் குறைகின்றது

காலத்தை வென்ற கால கண்டனை வலைபடுவதால் மரணத்தின் பயத்திலிருந்து விடுபடலாம்

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *