பரபரப்பாக நடக்கவிருக்கும் ரேகா சத்யா திருமணம் – மீனா முத்து போடும் புதிய வேஷம்- கண்டுபிடித்த சிந்தாமணி
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ், ரோகிணி தனக்கு விவாகரத்து கொடுப்பதை கொடுப்பதாக சொன்னதாகவும் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் திரும்ப கேட்பதாகவும் வீட்டில் இருப்பவர் இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த பணத்தை யார் தருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மனோஜ் அடுத்து ரேகாவை திருப்பதியில் உள்ள வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள் இதை சத்யாவிடம், ரேகா சொல்லி என்னை வீட்டில் இருந்து வெளியே கூட்டி செல்லுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டிருக்கிறாள், ரேகாவை காப்பாற்ற முத்து ஒரு மாஸ்டர் பிளான் உடன் திருப்பதி செல்கிறார்
credits – Google

மனோஜின் மனநிலையை பார்த்து கோபப்படும் அண்ணாமலை
மனோஜ் சோகமாக அமர்ந்திருக்கிறார் மனோஜ்க்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறார் என்று முத்து ரவி அண்ணாமலை விஜயா என அனைவருமே கேட்கிறார்கள், அதற்கு மனோஜ் எனக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என சொன்ன மனோஜ் ரோஹிணி சொன்னதை சொல்கிறார், சில நாட்களுக்கு முன்பு ரோகினியை சந்தித்து பேசினேன் ரோகிணி எனக்கு இரண்டு ஆப்ஷனை கொடுத்திருக்கிறாள் ஒன்று இந்த வீட்டை விட்டு வெளியேறி ரோகினி உடன் சேர்ந்து வாழ்வது, இரண்டாவது அவள் எனக்காக கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்தால் விவாகரத்து கொடுப்பேன் எனவும் சொல்லிவிட்டாள்,
அண்ணாமலையை உதவும் படி கேட்கும் மனோஜ்
மனோஜ் எனக்கு 5 லட்சம் ரூபாய் நீங்கள் கொடுங்கள் என முத்து விடவும் அண்ணாமலையிடமும் கேட்க முத்துவோ, ஏற்கனவே நீ வாங்கிய பணத்திற்காகத்தான் நான் இப்பொழுது அலைந்து கொண்டிருக்கிறேன், என்னால் முடியாது உனக்காக உன்னை காப்பாற்றுவதற்காக 5 லட்சம் ரூபாயை ரோகிணி கொடுத்தால், நீதான் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் அந்த பணத்திற்கு நீ தான் பொறுப்பு எனவும் அண்ணாமலை கூறிவிட்டு சென்று விட்டார்
முத்துவிற்கு வரும் phone call
முத்துவிற்கு சத்யா மிகவும் பதட்டமாக படபடப்பாகவும் கால் செய்கிறார், ரேகாவை அவள் அம்மா சிந்தாமணியும், அப்பாவும் திருப்பதியில் உள்ள வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் என்னை எப்படியாவது இந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள் எனவும் சத்யாவிடம் சொன்னதாக சத்தியா முத்துவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான், இதை கேட்ட உடனே ஒரு முடிவு செய்து சத்யாவை தேடு முத்து நான் வீட்டுக்கு செல்கிறான்
ரேகாவை காப்பாற்ற போராடும் முத்து
உங்க வீட்டில் சந்திரா மற்றும் சத்யா இருவருமே இருக்கிறார்கள், அந்த சமயத்தில் ரேகா போன் செய்து முத்து விடம் பேசுகிறாள், என்னால் சத்தியம் இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை என் அம்மாவிடமும் அப்பாவிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன் அவர்களும் புரிந்து கொள்ள வில்லை, என முத்துவிடம் ரேகா சொல்லிக் கொண்டிருக்கிறாள்
முத்து ரேகாவிடம் எப்படியாவது நீ அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் உன்னை நாங்கள் அழைத்து சென்று விடுகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு நீ மயக்கம் போடுவது போல் நடித்து எப்படியாவது மருத்துவமனைக்கு சென்று விடு அங்கு சென்றவுடன் நாங்கள் வந்து உன்னை அழைத்துச் சென்று விடுவோம் என்றும் என் மீது நம்பிக்கை வைத்து எதையும் செய்யுங்கள் கண்டிப்பாக உன்னையும் சத்யாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்று முத்து உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறான்
சிந்தாமணியின் புத்திசாலித்தனம்
ரேகாவும் முத்து சொன்னபடியே நடித்து ஹாஸ்பிட்டளுக்கு சென்று விட்டாள், இதை தெரிந்த ரேகாவின் அப்பா பதட்டத்துடன் இருக்கிறார் ஆனால் சிந்தாமணியோ துளி பயமும் பதட்டமும் இல்லாமல் இருக்கிறாள் சிந்தாமணிக்கு இதில் ஏதோ சதி இருப்பது போல் தெரிகிறது முத்து படிக்காதவன் தான் ஆனால் அதனுடன் நிறைய திறமைகள் இருக்கின்றன அவன்தான் ரேகாவை இதுபோல் நடித்து ஹாஸ்பிடலுக்கு வர வைத்திருப்பான் என கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார், உடனே அவரும் ஹாஸ்பிடலை சுற்றியும் ரேகாவிடமும் அடியாட்களை வைத்து ரேகா தப்பிக்காதவறு எச்சரிக்கிறார்

முத்து மீனாவின் புதிய வேஷம்
சிந்தாமணி பயங்கர கோவத்தில் இருக்கிறாள், என்ன ஆனாலும் ரேகா அந்த குடும்பத்துக்கு மருமகளா போயிட கூடாது என்று, மற்றோரு பக்கம் முத்து,மீனா, சத்யா,செல்வம் அனைவரும் ரேகாவை காப்பாற்ற டாக்டர், வார்டு பாய் வேஷத்தில் செல்கிறார்கள் இனி அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் முடித்து விட்டார்கள், முத்து ரேகாவை காப்பாற்றுவாரா?? இல்லையா??

