NEWTop Newsசெய்திகள்தமிழகம்

தொடர்ந்து சிறுமிகளையே குறி வைக்கும் மனித அரக்கர்கள் -கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி நடந்த கொடூரம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக சிறுமிகள் என்று கூட நினைவில் இல்லாமல், மனித அரக்கர்கள் சிறுமிகளுக்கு நினைக்க முடியாத அளவிற்கு பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு சிறுமிகளின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அழிக்கின்றனர், தமிழ்நாட்டில் இதுபோன்ற பாலியல் வன்கிழமை தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகின்றன, இது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் காவல்துறையின் கடுமையான சட்டம் poksos

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பிகாரைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.ஜூன் 14ஆம் தேதியன்று மாலை சுமார் 5 மணியளவில் அத்தம்பதி, ‘தங்களின் மூன்று வயது குழந்தையைக் காணவில்லை’ எனக் கூறி சுற்றுப்புற பகுதிகளில் தேடியுள்ளனர்

அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே காணாமல் போன 3 வயது குழந்தை ரத்த காயங்களுடன் கிடந்துள்ளதைப் பார்த்துள்ளனர் அப்பொழுதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று காலை (ஜூன் 15) உயிரிழந்துவிட்டதாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்

குழந்தைக்கு செயற்கை சுவாசம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அரவிந்த், “நேற்று இரவு 11 மணிக்கு சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல்ரீதியான வன்முறையால் அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. காலை சுமார் 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நபரை பற்றி எந்த தகவலும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை கடைசியாக அந்த குழந்தையிடம் பிஸ்கட் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து சென்றதும், அடிக்கடி பிஸ்கட் வாங்கி கொடுக்கும் இந்த பழக்கத்தை வாடிக்கையாக தொடர்ந்து செய்துள்ளார்

அரசியல் தலைவர்கள் கண்டனம்

இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?’ என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

.அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த சம்பவம், தவெக தலைவருமான முதலமைச்சர் விஜய் அரசின் மீது கேள்வி எழுப்பியுள்ளனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *