திமுக ஆட்சியில் அழுகிய முட்டை – தவெக ஆட்சியிலும் இது தொடரக்கூடாது எச்சரித்த அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குழந்தைகளின் நலன் கருதி தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டங்களில் நல்ல சுகாதாரமான , தரமான ஊட்டச்சத்து மிகுந்த முட்டைகளை குழந்தைகளுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், இதற்கு காரணம் கடந்த திமுக ஆட்சியில் மதிய உணவுத் திட்டங்களில் அழுகிய முட்டை தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது
மதிய உணவு திட்டத்தின் கீழ் பயணடையும் மாணவர்கள்
தமிழ்நாடு முழுவதும் சுமார் 43000 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, தினசரி தொடக்க பள்ளிகளில் சுமார் 19.37 லட்சமும், உயர் நிலை பள்ளிகளில் 21,45 லட்சம் மாணவ மாணவியர்கள் பயணடைந்து வருகின்றனர், சுகாதாரமற்ற மற்றும் ஆரோக்கியமற்றும், தரமற்றும் கிடைக்கும் உணவுகளால் இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
credits – Google

ஒப்பந்ததாரர்களின் முறைகேடு
2026 மார்ச் மாதம் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 3.70 பைசாவிற்கு குறைந்தது, இதனை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் குறைந்த விலையில் முட்டைகளை 20 கோடிக்கும் அதிகமாக வாங்கிய குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர் என்ன வெளியாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, இதனை பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் கொடுப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக வெளிவந்தது,
credits – google

நிலையான முட்டை விலை நிர்ணயம்
தமிழக பள்ளி மாணவர்களின் ” மதிய உணவு திட்டத்தின் மாணவ மாணவியர்களுக்கு அளிக்கும் முட்டைக்கு ஆண்டு முழுவதும் ஒரு நிலையான விலையை நிர்ணயித்துள்ளது, ஒரு முட்டையின் நிலையான விலை ரூ 5.63 இருப்பினும் குறைந்த விலையில் கிடைப்பதால் 20 கோடிக்கு முட்டைகளை வாங்கி, மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கொடுக்க குளிர் சாதன கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர், இந்த நிகழ்வு ஒப்பந்தகார்களின் பேராசையை பிரதிபளிக்கிறது, இருப்பினும் இது சரியான முறை இல்லை இதனால் பல குழந்தைகள் அவதிப்படும் நிலை உருவாக கூடும்
அண்ணாமலையின் கோரிக்கை
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதன கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் போது அதன் தரம்,ஊட்டச்சத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்
திமுக ஆட்சியில் அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு மதிய உணவுக்கு கொடுப்பதை பலமுறை கண்டித்து கூறி இருக்கிறோம்,அதே நிலை தவெக ஆட்சியிலும் நிகழக்கூடாது என்றும், இது வெறும் கொள்முதல் பிரச்னை மட்டும் இல்லை, பல ஏழை எளிய பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அரசின் மீது பெற்றோர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எனவும் கூறியுள்ளார்

