Jallikattu bullsNEWஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்

வீடு தொடர்பான பிரச்சனை தீர்க்கும் வராஹ ஜெயந்தி விழா மற்றும் அதன் வழிபாடு

வராஹ ஜெயந்தி என்பது மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) மூன்றாவது அவதாரமான வராஹ மூர்த்தியாக அவதரித்த தினத்தைக் குறிக்கிறது.மேலும் பூமாதேவியைக் மீட்கவும், அசுரனை அழிக்கவும் மகாவிஷ்ணு பன்றி (வராஹம்) உருவம் எடுத்து, தனது நீண்ட கோரைப் பற்களால் பூமியைத் தூக்கி வந்து மீண்டும் நிலைநிறுத்தினார்.

வராஹ ஜெயந்தி விழா

பங்குனி 24 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் கிழமை பஞ்சமி திதி நாளில் வராஹ ஜெயந்தி விழா கொண்டாட படுகிறது.இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் வீடு சம்பந்த பட்ட சிக்கல் குறையும்,மன தைரியம் மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி பெற இந்நாளில் வராஹ மூர்த்தியை வணங்கலாம்

விஷ்ணுபகவான் பூமி தாயை காப்பாற்ற பன்றி அவதாரம் எடுத்து அசுரனனை வென்று பூமா தேவியை காப்பாற்றினார் அதே போல் நிலம் சம்பந்த பட்ட சிக்கல், புதிய வீடு கட்டுதல் மேலும் செல்வம் பெறுகவும் இந்த வராஹ ஜெயந்தி விழாவை கொண்டாடலாம்

source credit-google

வராஹ ஜெயந்தி விரதம்

  • அதிகாலையிலேயே நீராடி, தூய ஆடை அணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். மகாவிஷ்ணுவின் வராஹ அவதாரப் படம் அல்லது விக்கிரகத்திற்குத் துளசி மாலை அணிவித்து, சந்தனம் மற்றும் குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.
  • ‘ஓம் நமோ பகவதே வராஹரூபாய’ போன்ற வராஹ கவசம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுவது மிகுந்த பலனைத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால், தேன் மற்றும் பழங்களை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது சிறப்பு
  • மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கி, மன உறுதி மற்றும் தைரியம் பெருகும். இழந்த செல்வம் மற்றும் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *