வித்யாசகர் திட்டி எழுதி ஹிட்டான பாடல் “காதல் பிசாசு “
2002 ல் வெளியான மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த திரைப்படம் ரன். இந்த படம் வெளியான நாட்களிலேயே அதிக வசூலை அள்ளியுள்ளது, மீண்டும்” ரன் “திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகும் நிலையில் இசையமைப்பாளர் வித்யாசகர் மற்றும் கவிஞர் யுகபாரதி பற்றிய சுவாரஷ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் கவிஞர் யுகபாரதி
ரன் திரைப்படத்திற்கு யுகபாரதி தான் பாடலாசிரியர் என இசையமைப்பாளர் வித்யாசகரிடம் லிங்குசாமி அறிமுக படுத்தியிருக்கிறார்,இவர் தான் பாடல் எழுத வேண்டுமா?? என்று குறைத்து எடை போட்டு கேட்டதாகவும், மேலும், பாடல் எழுதுவது குறித்து யுகபாரதியிடம் பேசிய வித்யாசாகர், கடிதம் எழுதுவடு போன்ற காட்சி இருக்கும், ஆனால் அன்புள்ள என தொடங்க கூடாது என கண்டீஷன் போட்டாராம். மேலும், “தென்றல், பூ, நிலா, கண்மணி” உள்ளிட்ட எதுவும் இருக்க கூடாது என வித்யாசாகர் கூற கூடாது என்றும் கூறியுள்ளார்
யுகபாரதி வித்யாசகர் மீதுள்ள கோபத்திலயே காதல் பிசாசே, காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை என்ற பாடல் வரிகள் உருவாகியதாகவும் கூறியுள்ளார்
நா.. ந ந நா..
நா.. ந ந நா..
நா நா நா.. ந நா
நா.. ந ந நா..
நா.. ந ந நா..
நா நா நா.. ந ந
காதல் பிசாசே, காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே, காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை
இரவுகளும் பரவாயில்லை
இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
காதல் பிசாசேஹே, காதல் பிசாசே
உல லெ லெல்ல லோ
உல லெ லெல் லோ
உல லெ லெல்ல லோ
லெ லெல் லெல் லோ…
கொஞ்சம் உளறல்,
கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ…
கொஞ்சம் சிணுங்கல்,
கொஞ்சம் பதுங்கல்
கற்றுக்கொடுத்தாய் நீ நீ நீ…
அய்யோ அய்யய்யோ
என் மீசைக்கும் பூவாசம்
நீ தந்து போனாயடி…
பையா ஏ பையா
என் சுவாசத்தில் ஆண்வாசம்
நீயென்று ஆனாயடா…
அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம்
தந்தால் பரவாயில்லை…
காதல் பிசாசே
காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
காதல் பிசாசே!!காதல் பிசாசே!
கொஞ்சம் சிரித்தாய்,
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ…
கொஞ்சம் துடித்தாய்,
கொஞ்சம் நடித்தாய்
ரெட்டை பிறவி நீ நீ நீ…
அம்மா அம்மம்மா
என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்…
அப்பா அப்பப்பா
நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்…
அஞ்சு வயதுப் பிள்ளைபோலே
அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி
என்னைக் கொன்றால் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகள் பரவாயில்லை
கனவென்னை கொத்தி
தின்றால் பரவாயில்லை
இரவுகளும்பரவாயில்லை
இம்சைகளும்பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை
லே லே உல்லேலே
லே லே உல்லேலே
லே லே உல்லேலே
லே லே உல்லேலே
லே லே உல்லேலே
லே லே உல்லேலே

