கல்விசெய்திகள்தமிழகம்தேசியம்போட்டித்தேர்வுகள்வாழ்வியல்விழிப்புணர்வு

செப்டம்பர் 7 ல் நடந்த முக்கிய நிகழ்வுகள்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 7 சட்ட பேரவையில் காரசாரமான விவாதங்கள் பேச பட்டன,தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, திமுக உறுப்பினர்கள் அவையின் தொடக்கத்திலேயே கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் விஜய், “காவல்துறை நல்லவர்களுக்கு நண்பனாகவும், தீயவர்களுக்கு எதிரியாகவும் இருக்க வேண்டும்; சட்டம் அனைவருக்கும் சமம்” என விளக்கமளித்தார்.

கோவையில் மாணவர் கொலையில் 36 பேர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியதுடன், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டதையும் ‘சிங்கப்பெண்’ படை உருவாக்கத்தையும் குறிப்பிட்டுக் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்தினார்.

முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து பதிலளிக்கத் தனக்கு உடனடியாக வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டுப் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

அமளிகளுக்கு மத்தியிலும் ஊதியங்கள் வழங்குதல் சட்டத் திருத்த மசோதா, பஞ்சாயத்துகள் திருத்த மசோதா மற்றும் மதிப்புக் கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய சட்டமுன்வடிவுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் உள்துறை மற்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முக்கிய உரை சட்டப்பேரவையில் நடைபெற்றது.

செப்டம்பர் 7 அன்று சட்டப்பேரவையில் வழக்கமான கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மற்றும் அரசின் பதிலுரைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 7 வரலாற்றுச் சிறப்பு

தமிழ் நாடக உலகின் ‘தலைமை ஆசான்’ மற்றும் “தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்” என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த தினம் 1867.தமிழ் நாடகக் கலையை மறுமலர்ச்சி செய்து, பல இளம் கலைஞர்களை உருவாக்கியவர்.

இளம் வயது அசோகா சக்ரா விருதினை பெற்ற முதல் பெண்

மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட பான் அம் 73 (Pan Am Flight 73) விமானம், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஆயுதம் ஏந்திய 4 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. நீரஜா அந்த விமானத்தின் மூத்த பணிப்பெண்ணாக இருந்தார்.

நீரஜா பனோட் (Neerja Bhanot) – தனது 22-வது வயதில் 359 மனித உயிர்களைக் காப்பாற்றத் தனது உயிரையே தியாகம் செய்த வீரமிக்க இந்தியப் பெண்.

தான் முதலில் தப்பியிருக்க முடியும் என்றாலும், குழந்தைகள் மற்றும் பயணிகளை வெளியேற்றுவதிலேயே நீரஜா கவனம் செலுத்தினார். மூன்று சிறு குழந்தைகளைத் தன் உடலால் மறைத்துப் பாதுகாத்தபோது, பயங்கரவாதிகள் சுட்ட தோட்டாக்கள் பாய்ந்து நீரஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இந்தியாவின் மிகயுயர்ந்த வீர விருதான அசோக சக்ரா விருதைப் பெற்ற மிக இளவயது நபர் மற்றும் முதல் பெண் நீரஜா ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *