ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -09.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 09.09.2026

பரபாவ வருடம் ஆவணி 23, புதன்கிழமை, September 09, 2026 பஞ்சாங்கம் –

திதி : 12:31 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : ஆயில்யம் 03:14 PM வரை பிறகு மகம்

யோகம் : சிவம் 09:51 PM வரை, அதன் பின் ஸித்தம்

கரணம் : வனசை 12:31 PM வரை பிறகு பத்திரை 11:30 PM வரை பிறகு சகுனி.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை

எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை

குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (09.09.2026)

மேஷம் -மகிழ்ச்சி பொங்கும்

ரிஷபம் -எதிர்ப்பு உண்டாகும்

மிதுனம் -சோதனை உண்டாகும்

கடகம் -இன்பம் பெருகும்

சிம்மம் – அச்சம் உண்டாகும்

கன்னி -பரிவு கிடைக்கும்

துலாம்- உடல் தேறும்

விருச்சிகம் -நிம்மதி உண்டாகும்

தனுசு -மன நிறைவு

மகரம் -ஏமாற்றம் உண்டாகும்

கும்பம் -மேன்மை கிடைக்கும்

மீனம் -வெற்றி உண்டாகும்

உங்களுக்கு தெரியுமா

செப்டம்பர் 9,புதன்கிழமை ஆவணி மாத சிவராத்திரி நாளாகும், இந்த நாளில் சிவன் வழிபாடு, நந்தி வழிபாடு செய்வது, வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு பலனை கொடுக்கும்.

அன்றைய தினம் அதிகாலையில் நீராடி, சிவனை மனதில் நினைத்து விரதத்தைத் தொடங்குவது சிறப்பு,பால், தயிர், தேன், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று பிரதோஷ நேரம் மற்றும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வது சிறப்பு. “ஓம் நமச்சிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்பது நன்மைகளைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *