செப்டம்பர் 4 ல் நடந்த முக்கிய நிகழ்வு மற்றும் நாட்டு நடப்புகள்
செப்டம்பர் 4 ஆம் தேதி நிகழ்ந்த முக்கிய நிகழ்வு மற்றும் தேசிய, நாட்டு நடப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்
தேசிய அளவிலான நிகழ்வுகள்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது,செப்டம்பர் 5 அன்று இந்திய நாடு முழுவதிலும் முக்கியமாக அனுசரிக்கப்படுகிறது,ஆசிரியர் தினம் இந்த நாள் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் நடைபெறும் விழாவில், சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பிப்பார்
இந்திய குடியரசு துணை தலைவர் வருகை
இந்தியத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5 அன்று சென்னைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்,
இன்று செப்டம்பர் 4,இந்தியத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5 அன்று சென்னைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் (பல்கலை கழக பட்டமளிப்பு விழாய் ) பல்வேறு கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்பதற்காக அவர் வருகை தருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் (SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.
திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் (Central University of Tamil Nadu) பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
தமிழக நிகழ்வுகள்
2026 நல்லாசிரியர் விருது
தமிழகத்தில் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ (நல்லாசிரியர் விருது) வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு அரசால் இந்த ஆண்டு மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
பள்ளி தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் மொத்தம் 48 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .இதில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் உட்பட சிறந்த கல்வியாளர்கள் புதுடெல்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் கையால் விருது பெறுகின்றனர்.
- எம். தங்கராஜ் (இடைநிலை ஆசிரியர் ) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, புளியம்பட்டி, தென்காசி மாவட்டம்.
- ஜெ.அமுதா (தலைமை ஆசிரியை )பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா (PM SHRI Kendriya Vidyalaya), திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘விகடன் டிஜிட்டல் விருதுகள்’ வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் முன்னணி டிஜிட்டல் படைப்பாளிகள், யூடியூபர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

