அதிமுக வெளியிட்ட 297 வாக்குறுதிகள் -குடும்ப தலைவிகளுக்கு சிறப்பு சலுகை
அதிமுக சார்பில் என்டிஏ கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது,திமுக, அதிமுக, நாதக, தவெக, ராமதாஸ் -சசிகலா அணி என ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக தலைமையில் ஆரம்ப புள்ளியாக எடப்பாடி பழனிச்சாமி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்,

மாதம்தோறும் வழங்கப்படும் முதியோர் ஓய்வுதிய திட்டம் (OAP ) 2000 ரூபாயாக உயர்த்த படும்
கல்விக் கடன் வாங்கி பயிலும் மாணவர்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்து,முழுவதையும் அரசே ஏற்கும்
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டும்தோறும் இலவசமாக 3 சிலிண்டர்கள் வழங்கப்படும்
ரேஷன் அட்டதாரர்களின் குடும்ப தலைவிகளுக்கு “குளவிளக்கு திட்டம் மூலம் மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும், மேலும் குளிரசாதன பெட்டி வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 2000 ரூபாயும், +2 படித்து முடித்தவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் மற்றும் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ நீட்டிக்கப்படும்
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும் என அதிமுக தேர்தல் தெரிவித்துள்ளது
தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும்
மேலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் நடந்த முக்கிய இடஒதுக்கீடுகளை காங்கிரசிற்கு இணையாக சீட்டு கேட்கும் பாஜக – இறுதி நேரத்தில் ஒதுக்கீடு இங்கே படிங்கல்.

