செய்திகள்டிஎன்பிஎஸ்சிதமிழகம்தேசியம்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

செப்டம்பர் 9 ல் நடந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வு

வரலாற்று ரீதியாகச் செப்டம்பர் 9 ஆம் தேதி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானிய மேஜர் பானர்மேன் தலைமையிலான படைகளால் முற்றுகையிடப்பட்டு வீழ்த்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

அதன் பின்னணி

ஆங்கிலேயரின் வரி விதிப்பையும் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனைச் சரணடையக் கூறி பிரித்தானிய அரசு கெடு விதித்தது. அதற்கு அவர் மறுத்ததால் போர் வெடித்தது.செப்டம்பர் 5 அன்று தொடங்கிய தாக்குதல், செப்டம்பர் 9-க்குள் கோட்டையைக் கைப்பற்றும் நிலையை அடைந்தது.

கோட்டை வீழ்ந்ததைத் தொடர்ந்து கட்டபொம்மன் புதுக்கோட்டை தொண்டைமான் பகுதிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

தமிழ்நாட்டு நிகழ்வு

திமுக கண்டனம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையில், மறைந்த தலைவர்கள் குறித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா (MISA) சிறைவாசம் மற்றும் தியாகங்கள் குறித்தும் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

நடந்து முடிந்த சட்ட பேரவையில் முதல் அமைச்சர் விஜய் பேச்சு மற்றும் கருத்து தொடர்பாக திமுக கட்சி சார்பில், செப்டம்பர் 12 தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழும் என தெரிவிக்க பட்டுள்ளது.

தவெக ஆலோசனை கூட்டம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற இடை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில்,கட்சியின் தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தேர்தல் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு முறை மற்றும் மண்டல வாரியாகத் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

பராமரிப்பு மின்தடை

தமிழ்நாடு மின் உற்பத்தியும் பகிர்மானக் கழகமும் (TNPDCL) கோவை, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, பெரம்பலூர் உட்படப் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக முழுநேர மின்தடை நடைமுறையை அறிவித்துச் செயல்படுத்தியது.

தேசிய நடப்புகள்

வீர் -கார்டியன் 2026 தொடக்கம்

இந்திய விமானப்படை (IAF) மற்றும் ஜப்பான் வான் தற்காப்புப் படை (JASDF) இணைந்து நடத்தும் 14 நாட்கள் கூட்டு வான் பயிற்சி “வீர் கார்டியன் – 2026” ஜோத்பூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது.

இந்தியாவின் ரஃபேல், சுகோய் Su-30MKI, தேஜஸ் மற்றும் ஜப்பானின் F-2A போர் விமானங்கள் பங்கேற்கின்றன.

பாதுகாப்பு கவுன்சில் -1.10 லட்சம

முப்படைகளின் நவீனமயமாக்கலுக்காக ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரேடார்கள் கொள்முதல் செய்யப் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *