இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -01.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 01.09.2026
பரபாவ வருடம் ஆவணி 15, செவ்வாய்க்கிழமை, September 01, 2026 பஞ்சாங்கம் –
திதி : 07:42 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
நட்சத்திரம் : அஸ்வினி 02:42 AM வரை பிறகு பரணி
யோகம் : வ்ருத்தி 11:38 PM வரை, அதன் பின் துருவம்
கரணம் : பாலவம் 07:42 AM வரை பிறகு கௌலவம் 07:00 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (01.09.2026)
மேஷம் -நன்மை உண்டாகும்
ரிஷபம் -இன்சொல் உண்டாகும்
மிதுனம் -பரிசு கிடைக்கும்
கடகம் -சிக்கல் உண்டாகும்
சிம்மம் -ஓய்வு கிடைக்கும்
கன்னி -செலவு கூடும்
துலாம்-சிரமம் உண்டாகும்
விருச்சிகம்-பயம் அதிகரிக்கும்
தனுசு -எதிர்ப்பு உண்டாகும்
மகரம் -குடும்பத்தில் நலம்
கும்பம் -ஆதாயம் கிடைக்கும்
மீனம் -புகழ் ஓங்கும்
சுவாரஷ்ய தகவல்
எறும்புகள் அதிசயமான உயிரனம் ஏனெனில்,எறும்புகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. உடலின் பக்கவாட்டில் உள்ள சிறிய துளைகள் (Spiracles) வழியாகவே சுவாசிக்கின்றன. மேலும் அவை தூங்குவதே இல்லை என்று கருதப்பட்டாலும், தினமும் பலமுறை சில வினாடிகள் குட்டித் தூக்கம் போடும்
மனிதர்களைப் போலவே ஒவ்வொரு கொரில்லாவிற்கும் விரல் ரேகை (Fingerprint) தனித்துவமாக இருக்கும்.
வரிக்குதிரையின் உடம்பில் உள்ள கருப்பு-வெள்ளை வரிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை, அவை கொசுக்கள் மற்றும் ஈக்கள் அதன் மீது அமர்வதைத் தடுக்க உதவுகின்றன.

