ரோஹிணி என்ன திட்டத்தில் இருக்கிறார்??? மீண்டும் விவாகரத்து கொடுக்க தயாராகும் ரோஹிணி -மனோஜிற்கு நிம்மதி
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினியை சந்தித்து மீனா, ஸ்ருதி இருவரும் மனோஜின் மன நிலையை பற்றி கூறி, மனோஜை விவாகரத்து செய்வது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது என்று எடுத்து கூறி கொண்டிருக்கிறார்கள். ரோகினியும் மனோஜை தேடி சென்று விவாகரத்து செய்ய தயார் என்று கூறிவிட்டு செல்கிறார்.
credits -google

மனோஜிற்கு உங்கள் மீது அக்கறையே இல்லை
மீனாவும் ஸ்ருதியும் ரோகினியிடம் “மனோஜ் உங்களுக்கு விவாகரத்து செய்வதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார், அவருடைய குழந்தைய்யே அவர் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க, இவ்வளவு கஷ்டம் கொடுக்கும் போதும் எதுக்கு அவரை டிவோர்ஸ் பண்ணாம, அவரோட சேர்ந்து வாழணும்னு இவளோ போராடறீங்கனு கேள்வி கேட்கறாங்க, ஆனால் ரோகினியிடம் எந்த பதிலும் இல்லை.
மனோஜிற்கு என்மேல லவ் இருக்கு, அவங்க அம்மாக்கு பயந்துட்டு தான் என்கிட்ட குழந்தைய கலைக்க சொல்லி டார்ச்சர் பன்றாரு, கண்டிப்பா ஒரு நாள் என்கிட்ட வருவாருனு நம்பிக்கையா சொல்லிட்டு இருக்காங்க
மனோஜிற்கு வந்த சோதனை
மனோஜ் ஷோரூமில் கன்னத்திற்கு கை கொடுத்து உக்காந்திருக்கிறார், ஒரு பொண்டாட்டி சமாளிக்க முடியாத இந்த காலத்தில் ரெண்டு பொண்டாட்டி உனக்கு தேவையா?? என்று அவருக்கு அவரே கேட்டு கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த நுமாராலாஜிஸ்ட் வழக்கம் போல் மனோஜை கோடிஸ்வரன் யோகம் உங்களுக்காக காத்திருக்கிறது என்று சொல்லி கொண்டிருக்க, உடனே மனோஜ் “இப்படி சொல்லி சொல்லியே என்ன இங்க கொண்டு வந்து நிறுத்தியிறுக்கீங்க, எங்க அம்மாவிற்கு என் மேல சந்தேகம் வந்திடுச்சு, ரோஹிணி டிவோர்ஸ் தரமாட்டானு பிரச்சனை கொடுக்கிறாள், விவாகரத்தே கொடுக்காமல் இரண்டாவது திருமணம் செய்தாச்சு!எப்போ மாட்ட போவனோ!! புலம்பி கொண்டிருக்கிறார்.
வழக்கம் போல் நுமாராலாஜிஸ்ட் ரோஹிணியே தேடி வந்து டிவோர்ஸ் கொடுப்பாங்கனு சொல்கிறார்
credits -google

ரோகினியின் மாற்றம்
அந்த நேரமே ரோஹிணி மனோஜை தேடி வருகிறார், மனோஜும் நம்ம ரெண்டு பேரும் பிரியரது தான் ரெண்டு பேருக்கும் நல்லது என்கிறார், உடனே கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் குழந்தையை எப்பொழுது அபௌஷன் பண்ண போகிறாய் என்று கேட்கிறார்,
மீனாவும் ஸ்ருதியும் சொன்னது போலயே அக்கறையே இல்லாமல் பேசி கொண்டிருக்கிறார் என்பதை ரோஹிணி உணர்கிறாள், “உனக்கு டிவோர்ஸ் ஆனா போதும் தானே… வீட்டுக்கே வந்து கையெழுத்து போட்டு தரேன், உங்க அம்மாகிட்ட சொல்லிடுங்கனு ரோஹிணி சொல்கிறார், இந்த குழந்தையை பற்றி நீ பேசாதே!! உனக்கு தேவை டிவோர்ஸ் கிடைக்கும் என்று சொல்கிறார்.
இதை ரொம்பவும் சந்தோசமாக “அப்படியா! ரொம்ப சந்தோசம்” என்கிறார், சீக்கிரம் கையெழுத்து போட்டு விட்டால், நீயும் உன் வாழ்க்கையை பார்த்து கொள்ளலாம் என்று சுயநலத்துடன் கூறி கொண்டிருக்கிறார்.
ரோகினியின் அடுத்த மூவ் எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்பை கூட்டுகிறது, மீனாவும், ஸ்ருதியும் சொன்னது போல் மனோஜின் வாழ்க்கையை விட்டு விலக போகிறாரா?? அடுத்து பார்க்கலாம்.

