இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -19.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 19.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 2, சனிக்கிழமை, September 19, 2026 பஞ்சாங்கம் –
திதி : 03:27 PM வரை அஷ்டமி பின்னர் நவமி
நட்சத்திரம் : மூலம் 01:42 AM வரை பிறகு பூராடம்
யோகம் : ஆயுஷ்மான் 02:28 PM வரை, அதன் பின் சௌபாக்யம்
கரணம் : பவம் 03:27 PM வரை பிறகு பாலவம் 04:40 AM வரை பிறகு கௌலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (19.09.2026)
மேஷம் -செலவு அதிகரிக்கும்
ரிஷபம் -பயம் கூடும்
மிதுனம் -கவலை உண்டாகும்
கடகம் -ஆதரவு பெருகும்
சிம்மம் -பணிவு உண்டாகும்
கன்னி -தொழில் வெற்றி
துலாம்-நன்மை பெருகும்
விருச்சிகம்-குடும்பத்தில் அமைதி
தனுசு -தாமதம் ஏற்படும்
மகரம் -நற்செயல் பெருகும்
கும்பம் -மேன்மை உண்டாகும்
மீனம் -பாராட்டு குவியும்
சீமை கருவேல மரம் பற்றிய தகவல்
சீமை கருவேல மரம் (Prosopis juliflora) என்பது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அயல்நாட்டுத் தாவரமாகும். இந்தியாவில் விறகுத் தேவைகளுக்காகவும் வேலியாகவும் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மரம், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது
இந்த கருவேல மரம் சுதந்திரத்திற்குப் பின், கிராமப்புறங்களில் நிலவிய கடுமையான விறகுப் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு இதன் விதைகளைக் ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகத் தூவியது. விறகுத் தேவைக்கும், வேலிகளுக்கும் இது விரைவாக வளரும் தீர்வாகப் பார்க்கப்பட்டது.
வறட்சியைத் தாங்கி வளரும் திறன் மற்றும் ஆடு, மாடுகள் இதன் நெற்றுகளை உண்டு விதைகளைப் பரப்பியதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தரிசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் இது தானாகவே பெருமளவில் ஆக்கிரமித்தது.
தற்போது சீமை கருவேல மரங்களை (Prosopis juliflora) முற்றிலும் அகற்றி நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசும் இணைந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

