குரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிதமிழகம்தேசியம்போட்டித்தேர்வுகள்ராணுவம்

டின்பிஸ்சி மற்றும் யுபிஸ்சி போட்டி தேர்வுக்கான அன்றாடம் தகவல் -02.11.2026

புதிய சமூகப் பாதுகாப்பு வாரியங்கள் (Social Security Boards

முறசாரா தொழிலாளர்கள் (Unorganised Workers) மற்றும் ஜிகே மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கான (Gig and Platform Workers) இரண்டு தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது. இது சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை தேசிய வாரியமானது, அமைப்புசாரா தொழிலாளர்கள் (Unorganised Workers) மற்றும் ஜிகே மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் (Gig and Platform Workers) ஆகியோருக்காக இரண்டு தனித்தனிப் பிரிவுகளுடன் செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது

இத்தகு தொழிலாளர்களுக்குத் தேவையான ஆயுள் காப்பீடு, மருத்துவ மற்றும் மகப்பேறு நலன்கள், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்கவும், அவற்றைச் செயல்படுத்த அரசுக்கு வழிகாட்டவும் இந்த வாரியம் வழிவகை செய்கிறது.

ஜிஎஸ்டி வசூல் சாதனை (GST revenue )

பண்டிகைக் கால தேவையின் காரணமாக அக்டோபர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் 23% அதிகரித்து ₹2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

கடந்த 2025 அக்டோபர் மாத வசூலை விட 22.9% (சுமார் 23%) அதிகம்.

மொத்த ஜிஎஸ்டி வசூல் (Gross GST): ₹2,31,290 கோடி (₹2.31 லட்சம் கோடி).

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்காக ₹7,460 கோடி பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது (8% வளர்ச்சி).

இந்திய விமானப்படை (IAF) புதிய நியமனம்

வான்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா (Air Marshal Inderpal Singh Walia) இந்திய விமானப் படையின் அடுத்த துணைத் தளபதியாக (Vice Chief of the IAF) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் புதிய துணைத் தளபதி (Vice Chief of the Air Staff – VCAS). ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா நவம்பர் 01 பொறுப்பினை ஏற்றுள்ளார் (Air Marshal Inderpal Singh Walia, AVSM, VM).

ஏர் மார்ஷல் பற்றிய தகவல்

அசுதோஷ் தீட்சித் (Ashutosh Dixit) விமானப்படை தலைமைத் தளபதியாக (Chief of the Air Staff) பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

1988 ஆம் ஆண்டு போர் விமானியாக (Fighter Pilot) இந்திய விமானப்படையில் இணைந்தார்.மிக்-21, மிக்-23, மிக்-27, ஜாகுவார் மற்றும் சுகோய்-30 (Su-30MKI) ஆகிய முன்னணி போர் விமானங்களை இயக்கிய நீண்டகால அனுபவம் கொண்டவர்.

  • கிழக்கு வான்படை தளபதி
  • தந்திரோபாய மற்றும் வான் போர் மேம்பாட்டு மையம் (TACDE) மற்றும் பரேலி வான்படை தளத்தின் கமாண்டராகப் பணியாற்றியுள்ளார்
  • ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகங்களில் பாதுகாப்பு அதிகாரியாகவும் (Defence Attaché) சேவை ஆற்றியுள்ளார்

பதக்கம்

  • அதி விசிஷ்ட் சேவா பதக்கம் (AVSM – 2018): மிகச்சிறந்த மற்றும் சிறப்பான சேவைக்காக வழங்கப்பட்டது.
  • ​வாயு சேனா பதக்கம் (VM – 2008): விமானப்படையின் வீரம் மற்றும் தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது.

இஸ்ரோவின் NVS-03 சாதனை

விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *