கர்நாடகவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை -காரணம் உண்மையா??
நேற்று (ஆகஸ்ட் 15) கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய நான்கு பேர் பாதிக்க பட்டுள்ளனர், இதில் மூவர் சுட்டு கொள்ளப்பட்டனர், ஒருவர் மரிய மகிமை தாஸ் படுகாயமடைந்துள்ளார்.
credits -google

தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதியான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.இதில் மூவரும் வனபகுதியில் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடத்தில் மான் இறைச்சி இருந்ததாகவும்,வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும் கர்நாடக வனத்துறை சார்பில் சொல்லப்படுகிறது,
ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தார் தரப்பில் காணாமல் போன மாடை தேடி கண்டுபிடிக்க காட்டுக்குள் போனதாக கூறியும், இந்த தூப்பாக்கி சூடு நடத்த என்ன உண்மை காரணம் என்னவென்று கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்த சம்பவம் தமிழ்நாடு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெபஸ்டின் டேவிட் குமார் கேரளத்தில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்ததாகவும், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த நிலையில் அக்காவின் வீட்டில் 50 மாடுகள் மேயச்சளுக்காக காட்டுக்குள் சென்ற நிலையில், சில மாடுகள் வரவில்லை என்று தேட சென்றதாகவும்,மாடுகள் கிடைக்காத நிலையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.
7 பேர் சென்ற நிலையில் மூன்று பேரினை சுட்டு கொன்றுள்ளனர், எந்த தகவலும் சொல்லாமல் 3 உடல்களையும் எடுத்து சென்றாதாக சொல்லப்படுகிறது, இதில் ஒருவர் குண்டு காயத்துடன் தப்பியுள்ளார், அவர் சொன்ன தகவலினால் தான் கொல்ல பட்ட செய்தியே தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் போக்குவரத்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
தமிழகத்தில் எழும் கண்டனங்கள்
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்
அதே போல் ” குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது’ அதுமட்டுமில்லாமல், இதில் தமிழ்நாடு அரசு தனது கடும் கண்டனத்தை கர்நாடக அரசிற்கு பதிவு செய்திட வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

