சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

ஆடாவடியாகும் மனோஜின் மாமியார் – மனோஜிற்கு திண்டாட்டம்

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோஹிணி நினைத்தப்படியே முத்துவிற்கு அண்ணாமலையிடம் இருந்து வெறுப்பை சம்பாத்திக்கிறார், ஆனால் மீனாவிற்கு குழந்தை பிறக்கும் என்று தெரிந்த உடனே விஜயா சந்தோச படுகிறார்,அதை தொடர்ந்து மனோஜ் கனகாவின் அம்மாவின் உண்மையான முகத்தை பார்த்து பயப்படுகிறார்

credits -google

அண்ணாமலையின் வெறுப்பு -விஜயாவின் சந்தோசம்

ரோஹிணி மீனாவின் பிரச்சனையை கூறி ” என் குழந்தை தான் உங்க வீட்டின் ஒரே வாரிசு ” என்று சொல்ல விஜயா மீனா எதுவுமே சொல்லலையே நீ தான் பொய் சொல்கிறாய் என்று கூறுகிறார்

விஜயா வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் சொல்லி முத்துவிற்காக காத்து கொண்டுருக்க, முத்து வருகிறார், முத்துவை நோக்கி பல கேள்விகள் கேட்கின்றனர், மனோஜ் மட்டும் முத்து ஏதோ பிராடு போல கேள்வி கேட்கிறார்,ஆனால் நடந்ததோ வேறு, “அண்ணிக்கு ஒரு பிரச்சனை அப்படினு நீ மட்டும் போய் நிக்கிறியே? நாங்க வரமாட்டமா?? என்று ரவி கேட்கிறார்,

மீனா இந்த வீட்டு மருமகள் அவளுக்கு ஒரு பிரச்சனை எங்களுக்கு தெரியனும் இப்படி எல்லாம் இனி பண்ண கூடாது என்று அண்ணாமலை கடிந்து கொள்கிறார்.

credits -google

விஜயாவின் ஆசை

யாருமே எதிர்பாராத ஒரு ட்விஸ்டே விஜயா மீனாவிற்கு என்ன ஆச்சு?? அவளுக்கு குழந்தை பிறக்குமா?? என்றெல்லாம் கேட்டு குழந்தை பிறக்கும் என்று சொல்ல சந்தோச படுகிறார், சீக்கிரம் இந்த வீட்ல குழந்தை சத்தம் கேட்கணும் னு சொன்னது அதிசயமா இருக்கிறது

அடுத்து பாட்டி ஊரில் இருந்து பாட்டி மயக்கம் போட்டு விட்டதாக போன் வருகிறது, முத்துவும் அண்ணாமலையும் செல்கின்றனர்

credits, google

மனோஜ் மாமியாரின் கோவம்

மனோஜ் கனகாவின் வீட்டுக்கு செல்கிறார், கனகாவின் அம்மா கோபத்துடன் “என் மகள் தான் என் உலகமே, அவளின் எதிர்காலத்திற்காக என்ன செய்ய முடியுமோ எல்லாமே செய்து விட்டேன், நீங்க சொன்ன மாறி இன்னும் இந்த வீட்டு மாப்பிள்ளையாக எப்போ நடந்துக்க போறீங்க? னு கேள்வி கேட்கறாங்க

எப்பவும்போல மனோஜ் எனக்கு கொஞ்சம் டைம் வேணும், டிவோர்ஸ் வாங்குனா தானே நா கனகா ஹஸ்பண்ட் ஆகமுடையும்னு சமாளிக்கிறார், ஆனால் மனோஜ் மாமியார் கரராக கூறி விட்டார்.

“நீங்கள் வெளியுலகத்தில் எப்படியோ இருங்கள், ஏற்கனவே சொல்லிவிட்டேன் எங்கள் சொத்துக்கும் உங்களுக்கு பங்கு இருக்கிறது, அது வேண்டும் என்றால் நீங்கள் கனகாவிற்கு கணவனாக முழு பொறுப்புடன் இருக்க வேண்டும் “

அதுமட்டுமில்லாமல் ” கனகாவின் ஆசையா எங்க கூப்பிட்டாலும் போக வேண்டும், ஹாஸ்பிடல் செக்கப் போக வேண்டும், என்றெல்லாம் லிஸ்ட் அடுக்கி கொண்டே போகிறார், உடனே கனகாவும்” பார்க் போகனும் ஆசையா இருக்கு, அங்க போய் விளையாடலாம் “கூட்டிட்டு போ ஹஸ்பண்ட் னு கேட்கிறார்.

மனோஜிற்கு வேற வழியே இல்லை, போகலாம் என்று சொல்லிவிட்டார், பார்க்குக்கு போனால் அங்கு பார்வதி வர, மனோஜ் பயத்தில் ஒழிந்து கொள்கிறார், இப்போது கனகா ஹஸ்பண்ட் நான் இல்லை, அவர் தான் என சொல்ல நுமராலாஜிஸ்ட்டும் இல்லை.மனோஜ் பார்வதியிடம் மாட்டி கொள்வரா?? இல்லையா நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *