ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்

ஆடி மாதம் வந்தாச்சு!!முதல் நாளே ஆடி வெள்ளி தான் – ஆடி மாதத்தில் எத்தனை சிறப்புக்கள்!!

பொதுவாக ஆடி மாதம் என்பது ஆன்மிக ரீதியாகவும், விவசாய சூழளுக்கும் ஏற்ற மாதமாக அமைகிறது, உலக முழுதும் ஆடி மாதம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு, சுமங்கலி பூஜை என ஆன்மிக ரீதியான மன நிலையில் மக்கள் இருப்பார்கள், இந்த ஆடிமாதம் முழுதும் என்ன சிறப்புக்கள் பார்க்கலாம்

google -credits

ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அம்மாவாசை , ஆடி பெருக்கு , ஆடி பட்டம் விதை என பல சிறப்பு நாட்கள் ஆடி மாதம் உண்டு விரிவாக பார்க்கலாம்

ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் ஆடி வெள்ளியில் கணவரின் ஆயுள் நீடிக்க, தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பூஜை செய்வது சௌபாக்கியத்தை கொடுக்கும், 2026 ல் ஆடி மாதத்தில் முதல் நாளே ஜூலை17 ஆடி வெள்ளியாக இருப்பது விஷேஷமாகும், மேலும் ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு கூல் ஊற்றுதல்,பொங்கல் வைப்பது, வேண்டுதல்களை நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன

அதே போல் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது இந்த நாளில் ஒவையார் விரதம் இருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதி, குடும்ப வாழ்க்கை மேலோங்கும்

ஆடி மாதம் ஆன்மிக மாதம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமும் உண்டு, இந்த மாதத்தில் தான் அம்பிகை வேண்டிக்கொண்டு வரம் பற்ற மாதமாகும்

credits -Google

ஆடி கிருத்திகை விரதம்

முருக பெருமானின் அருளை பெற அவரின் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் கடைபிடிப்பது வழக்கமான ஒன்று,ஆனால் இந்த ஆடி கிருத்திகை முதல் ஆறு மாதம் தொடர்ந்து விரதம் தை கிருத்திகை வரை விரதம் இருந்து முடிப்பது விஷேஷமாகும், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகையை விட ஆடி கிருத்திகை மிகவும் விசேஷமானது

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது திதி கொடுப்பது மிகவும் விசேஷமான ஒன்று, அவ்வாறு திதி கொடுக்கும் பட்சத்தில் முன்னூரின் ஆன்மாவிற்கும் அமைதியை கொடுக்கும் குடும்பத்திற்கும் முன்னோர்களின் ஆசியினால் எந்த தடையும் இல்லாமல் நடக்கும்

ஆடிப்பெருக்கு

ஆடி 18 ஆம் நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடடுகிறோம், ஆடி ஆடி மாதத்தில் இந்த நாளுக்காக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கும் நாளாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த நாளில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நதிகள் ஏரிகள் இனிய சம்மந்தப்பட்ட இடங்களில் பூஜை செய்வது வழக்கம்,

மேலும் புதுமண தம்பதிகள் ஆற்றங்கரையில் தாலி சரடு மாற்றிக் கொள்வதும், ஆற்றங்கரையில் பச்சரிசி, வெல்லம்,பழம், பூக்கள் வைத்து படையிலிட்டு பூஜை செய்வார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *