குரு ஓரை நாள் பார்க்கலாமா
ஒரை நேரம் அனைவருக்கும் முக்கியமாக முக்கிய நிகழ்வுகள் தொடங்குபவர்களுக்கு உதவும் கால் அட்டவணை ஆகும். சூரிய உதயத்தில் தொடங்கும் ஓரை நேரம் சூரிய ஒரையிலிருந்து சனி ஓரை வரை, ஏழு ஓரைகள், ஏழு நாட்கள் என சுழன்று ராசிகளுக்கு உரிய ஓரைகளாகவும் சுப ஓரைகளாகவும் பிரிந்து செய்யும் முக்கிய செயலுக்கான வெற்றி பொருளாக இருக்கின்றது. இன்றைய ஓரை நேரம் பார்ப்போம்.
குரு ஓரை தொடக்கம்
வியாழன் நாளான இன்று தொடங்கும் ஓரை குரு ஓரை ஆகும். இந்நாளில் காலை ஆறு மணி குரு ஓரை சூரிய உதய நேரத்தில் ஆரம்பமாகின்றது. குரு ஓரையில் நாம் செய்ய வேண்டிய நற்காரியங்கள் மற்றும் ராசிகளுக்குரிய காரிய காரணங்கள் அறிந்த செயல்படுதல் சிறப்பு தரும்.
குரு ஓரையின் செய்ய வேண்டிய காரியங்கள்
குரு ஓரை சுப ஓரை என்று பெயர் பெற்றுள்ளது. குரு பார்வை கோடி புண்ணியம் என்று சொல்வார்கள் குரு ஓரை ஆனது சகல நன்மையும் நமக்கு பெற்றுத் தரும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற முக்கியமாக குரு ஓரையை பின்பற்றுதல் சிறப்பு தரும். இறையான குரு திருவருளை பெற நான் குரு ஓரையை சுப காரியங்கள் நன் நிகழ்ச்சிகள் தொடங்க பயன்படுத்திக் கொள்ளலாம். குரு ஓரை சுப ஓரை என்றும் அழைக்கப்படுகின்றது
குரு ஓரை ராசிகளுக்குரிய சுப ஓரை அட்டவணை இணைத்துள்ளோம்.
இன்றைய நாளின் ஓரை அட்டவணை இணைத்துள்ளோம்.

குரு ஓரையில் பயன் தரும் நேரத்தில் உங்களுக்கான முக்கிய காரியங்களை தெரிந்து அறிந்து செயல்படவும் வெற்றி வாய்ப்பினை பெறவும்
குரு ஓரையில் ஞாபகத்தில் வையுங்கள்
குரு ஓரை சுப ஓரையாக இருப்பினும் கிரகமான குருவுக்கு எதிரியாக அமையும் கிரகமெனில் அது சுக்கிர புதன் ஓரை ஆகும். வியாழக்கிழமைகளில் புதன் ஓரையும் சரியாக செயல்படாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஆக வியாழக்கிழமைகளில் இந்த ஓரைகளை நினைவில் வைத்து செயல்படுவோம். மேலும் வியாழக்கிழமை வியாழன் ஓரை என்பதால் அன்று சுக்கிர புதன் ஓரை சரியாக நமக்கு கை கொடுக்காது.

