வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இதை செய்தால் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் செல்வம் பெருகும் மங்கலம் உண்டாகும்
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலை எழுந்து வீடு முழுதும் சுத்தம் செய்து,வாசலில் கோளமிட்டு மஹாலக்ஷ்மியை வழிபடும்போது,வீட்டில் செல்வம் பெருகும்,தரித்திரத்தை நீக்கி மங்கலத்தை உண்டாக்கி செல்வம் நிலைத்து நிற்கும், இதை தொடர்ந்து தவறாமல் கடைபிடித்து வரும்போது வாழ்க்கை சிறக்கும்
வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி வழிபாடு
மஹாலக்ஷ்மி செல்வத்தின் அதிபதி ஆகும், வெள்ளிக்கிழமையில் அதிகாலை (அ) மாலை வேளையில், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி சொல்லி வர, வீட்டில் நிலையான செல்வம் தங்கும், கடன் தொல்லைகள் நீங்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பெருகும். பொதுவாக வீட்டில் சந்தோஷமும் சிரிப்பும் நிறைந்திருந்தால் செல்வம் பெருகும்
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி ஸ்தோத்திரங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்களைச் சொல்வது மிகவும் நன்மை தரும்
செல்வம் பெருக்கும் காயத்ரி மந்திரம்
ஓம் ஸ்ரீ மஹா-லக்ஷ்மி-யை ச வித்மஹேவிஷ்ணு-பத்ந்யை ச தீமஹிதன்னோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
குபேர காயத்ரி மந்திரம்
ஓம் யக்ஷ-ராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர: ப்ரசோதயாத்
தன-ஆகர்ஷண பெருமாள் காயத்ரி மந்திரம்
ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களை முழு மனதுடன் நெய் தீபம் ஏற்றி மந்திரங்களை தெளிவாகவும், சரியாகவும் 108 முறை உச்சரித்து மஹாலட்சமியை வணங்கலாம்
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை
வெள்ளிக்கிழமையில் வீட்டு வாசலில் கோலமிட செல்வம் பெருகும்
வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் தாம்பூலம் கொடுப்பது நற்பலன்களைத் தரும். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்
வீட்டில் ஒட்டடை அடிப்பது, அடுப்புகளை கழுவது, வீட்டை சுத்தம் செய்வது, பூஜை பொருட்களை சுத்தம் செய்வது போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் அழுக்கு துணிகளை துவைக்கக்கூடாது.. வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் கயிறு மாற்றுவது போன்ற செயல்கள் கடன் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகவிடுகின்றன
வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூவால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி வழிபட இல்லத்தில் சந்தோசம் பெருகும்
வெள்ளிக்கிழமையில் குபேரரை மகிழ்ச்சி அடைய செய்தால் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கும், இந்த நாளில் கல் உப்பு,அரிசி, தானியங்கள் போன்றவை வாங்கி வைத்தால் செல்வம் குறையாமல் இருக்கும்
அதேபோல் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை இருந்தாலும் நீங்கிவிடும்
வெள்ளிக்கிழமையில் கீரைகள், கொள்ளு, அசைவ வகை உணவுகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும்
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலைக்கு குளிப்பதும் தலைக்கு பூ வைப்பதும் விஷேஷமாகும்

